Idhayam Matrimony

பிரான்சை சேர்ந்த 2 சர்வதேச தீவிரவாதிகள் பாகிஸ்தானில் கைது

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஏப்.17 - பாகிஸ்தானில் வஜ்ரிஸ்தான் மலைப் பகுதி தலிபான்கள் மற்றும் அல்கொய்தாக்களின் பாதுகாப்பிடமாக திகழ்கிறது. இங்குள்ள மலைப் பகுதியில் பாதுகாப்புக்காக பதுங்கியுள்ள இவர்கள் தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்த முகாம்களில் பயிற்சி பெற்று வன்முறையில் ஈடுபட பல வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு மறைமுகமாக தீவிரவாதிகள் வருகின்றனர். 

எனவே அவர்களை தடுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிரான்சில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு 2 பேர் விமானம் மூலம் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்களில் ஒருவன் பேர் ஷராபுதீன் என்றும், பாகிஸ்தானை சேர்ந்த அவன் பிரான்சு குடியுரிமை பெற்றவன் என்றும் தெரியவந்தது. மற்றொருவன் ஷோகைப் அப்சல் என்றும், மொராக்காவை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. இவர்கள் வஜ்ரிஸ்தான் பகுதியில் உள்ள முகாமில் பயிற்சி பெற வந்தவர்கள் என்பது தெரியவந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் சர்வதேச தீவிரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு இந்தோனேசியாவில் உள்ள உமர் பட்டேக் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்