முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகன் சிங்குடன் பாக். உள்துறை மந்திரி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.16 - இந்தியா வந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் நேற்று புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் நாசவேலையில் ஈடுபட்டு வந்தாலும் அந்த நாட்டுடன் உறவை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மாலிக்கை இந்தியா வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு மாலிக் 3 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு வந்தார். நேற்று பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன் ஆகியோரை நேற்று டெல்லியில் மாலிக் சந்தித்து பேசினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மட்டுமின்றி தெற்காசியா பிராந்தியம் முழுவதும் அமைதி நிலவிட பாகிஸ்தான் விரும்புகிறது. மும்பை தாக்குதல் மற்றும் சம்ஜூதா ரயில்விபத்து போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஜமத்-உத்-தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஜ் சயீது மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பலமான ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் அவன் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாலிக் கூறினார். மாலிக் இந்தியா வந்த நேற்றுமுன்தினம் இருநாடுகளிடையே புதிய விசா முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விசா முறை வரும் ஜனவரி 15-ம் தேதியும் குரூப் விசா முறை வரும் மார்ச்  15-ம் தேதியும் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இருநாட்டு மக்களிடையே தொடர்பை அதிகரிக்கும் வகையில் புதிய விசா ஒப்பந்தம் இருநாடுகளிடையே கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்