முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயிற்றில் வைரஸ் பாதிப்பு மயங்கி விழுந்தார் ஹிலாரி

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச. - 17 - அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் திடீர் என்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடந்த 4 ஆண்டுகளில் 112 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் ஹிலாரி திடீர் என்று மயங்கி விழுந்தார். அவரது வயிற்றில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் மயங்கியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் சரியாகும் வரை அவர் வீட்டில் இருந்தே பணிபுரிவார் என்று கூறப்படுகிறது. அவரை தினமும் டாக்டர்கள் கண்காணித்து வருவார்கள் என்று தெரிகிறது. டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் தான் அவர் வீட்டில் இருந்தே பணி புரிகிறார். அவர் விரைவில் அலுவலகத்திற்கு செல்ல ஆர்வமாக உள்ளதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளன. ஹிலாரி ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விட்டு கடந்த வாரம் அமெரிக்கா திரும்பியதும் அவரது வயிற்றில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் கடந்த வாரம் பணியாற்றவில்லை. இந்த பிரச்சனையால் அவர் தனது வட ஆப்பிரிக்க பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்