முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் : 2-வது இன்னிங்சில் தடுமாறும் இங்கிலாந்து

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

நாக்பூர்: டிச - 17 - நாக்பூரில் நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 81 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தம்மை சதமடிக்க விடாமல் 99 ரன்களில் அவுட் செய்த கேப்டன் குக்கை பழிதீர்க்கும் வகையில் அஸ்வின் பந்தில் போல்டு செய்தார் குக்கை. இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தொடர் தோல்விகளைத் தழுவி வருகிறது. இந்த நிலையில் நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நாக்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 330 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அதன் பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி முதலில் தடுமாறியது. பின்னர் கேப்டன் டோணி- விராத் கோஹ்லி ஜோடியால் நிமிர்ந்தது. நேற்றைய 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன்களை எடுத்திருந்தது. இன்று 4-ம் நாள் ஆட்டத்தை அஸ்வினும் ஓஜாவும் தொடங்கினர். ஓஜா 3 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். அஸ்வின் 29 ரன்களையும் இஷாந்த் சர்மா 2 ரன்களையும் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக இந்திய அணி டிக்ளேர் செய்தது. மொத்தம் 326 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. முதல் இன்னிங்சில் இந்திய அணி 330 ரன்களை எடுத்திருந்தது. பழிதீர்த்த டோணி இந்திய அணியை விட 4 ரன்கள் முன்னிலை வகித்த இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் குக்கும் காம்பட்டனும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்து வந்தனர். அந்த அணியின் ஸ்கோர் 48 ஆக இருந்த போது அஸ்வின் வீசிய பந்தில் குக்கை கேப்டன் டோணி போல்டு ஆக்கி பழிதீர்த்தார். கேப்டன் டோணி 99 ரன்கள் எடுத்த நிலையில் அவரை சதம் அடிக்க விடாமல் ரன் அவுட் செய்திருந்தார் குக். இந்த இன்னிங்சில் குக் 13 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. காம்ப்ட்டனும் நீண்ட நேரம் நிற்கவில்லை. 34 ரன்களை அவர் எடுத்திருந்தபோது ஓஜா பந்தில் எல்.பி.டபிள்யூ அவுட் ஆனார். உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை எட்டி இங்கிலாந்து தடுமாறுகிறது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago