முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னிச்சையாக செயல்படும் தங்கபாலுவை நீக்க ஜெயக்குமார் போர்கொடி

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 -​ தங்கபாலு வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு முதல் கட்சிக்காரர்களை நீக்கியது வரை தன்னிச்சையாக செயல்படுகிறார். அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் ஐவர்குழுவில்  இடம் பெற்றிருந்தவருமான ஜெயகுமார் எம்.எல்.ஏ போர்கொடி உயர்த்தியுள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தொகுதி பங்கீட்டில் இடம் பெற்ற ஐவர் குழு உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:​ தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு 19 காங்கிரஸ் நிர்வாகிகளை விளக்கம் கேட்காமல் நீக்கியது செல்லாது. அவருக்கு இதற்கான அதிகாரமும் கிடையாது. அகில இந்திய காங்கிரஸ் சட்ட திட்டப்படி 19 (எப்) 5, 2/5 விதிகளின்படி, தவறு செய்யும் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு பரிந்துரை செய்ய 2 கமிட்டியை நியமித்துள்ளது. மாநில அளவில் குமரி அனந்தன் தலைமையிலான கமிட்டியும் மத்திய அளவில் ஏ.கே. அந்தோணி தலைமையிலான கமிட்டியும் உள்ளது. இந்த கமிட்டிதான் பரிந்துரை செய்ய முடியும். அதுவும் நேரடியாக பரிந்துரை செய்ய முடியாது. யார் தவறு செய்தார்களோ அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி 15 நாள் கால அவகாசம் கொடுத்து பதில் பெற வேண்டும். அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை என்றால்தான் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முடியும். அப்படி பரிந்துரை செய்த பிறகு, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி என்றால் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரும் எஸ்.சி.எஸ்.டி. மகிளா காங்கிரஸ் பிரிவு என்றால் அதன் அகில இந்திய தலைவரும்தான் நடவ டிக்கை எடுக்க முடியும். மாவட்ட கமிட்டி அளவில் உள்ளவர்கள் மீது மட்டுமே தங்கபாலு விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க முடியும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க தங்கபாலுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. எனவே 19 பேரை nullக்கி அவர் அறிவிப்பு வெளியிட்டது செல்லாது. இதுபற்றி நான் ஏற்கனவே காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத்திடம் புகார் செய்துள்ளேன். விரைவில் டெல்லி சென்று சோனியா காந்தியிடமும் புகார் செய்வேன். சட்டசபை தேர்தலின் போது உருவாக்கப்பட்ட ஐவர் குழு தொகுதி பங்கீடு மட்டுமே பேசினார்கள். வேட்பாளர்களை முடிவு செய்தது தங்கபாலுவும் வயலார் ரவியும்தான். தன்னிச்சையாக இவர்கள் வேட்பாளர் பட்டியலை தயாரித்து ஒப்புதல் வாங்கி உள்ளனர். எனவே தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து மாற்றவேண்டும். தனக்காக கோஷ்டி சேர்க்காத ஒருவர் தலைவராக வரவேண்டும் என்று மேலிடத்தில் வலியுறுத்துவேன். இவ்வாறு ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கூறினார். தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே இன்று காலை இளைஞர் காங்கிரசார் தங்கபாலு கொடும்பாவியை எரித்து திடீர் போராட்டத் ல் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் தி.நகர் உதவி கமிஷனர் மனோகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்திய 7 பேரை கைது செய்தனர். தி.நகர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தி.நகர் ஹரி, நிர்வாகிகள் கார்த்திக், சதீஷ், சுரேஷ், நாச்சிகுளம் சரவணன், எஸ்.சி.எஸ்.டி. பிரிவு நிர்வாகி வைரராஜ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்