முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை செல்கிறார் இந்திய ராணுவ தளபதி

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு, டிச. 18 - இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். இந்திய ராணுவ தளபதி பிக்ரம்சிங் தலைமையில் மூத்த ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கைக்கு புதன்கிழமையன்று செல்கிறது. இந்த பயணத்தின் போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே ஆகியோரை இக்குழு சந்திக்கிறது. 

பின்னர் வவுனியா செல்லும் இந்திய குழு அங்கு இலங்கை ராணுவ தலைமையகத்தை பார்வையிடுகிறது. மேலும் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளையும் பிக்ரம் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தியத்தாலவ, அனுராதபுரம், கண்டி ஆகிய இடங்களுக்கும் இந்திய ராணுவ அதிகாரிகள் குழு செல்லத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்