முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயக் சென்னுக்கு ஜாமீன் - காங்கிரஸ் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

போபால்,ஏப்.17 - பிரபல சமூக சேவகரும் டாக்ருமான விநாயக் சென்னுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஜாமீன் வழங்கியிருப்பதற்கு காங்கிரஸ் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. சட்டீஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் வினாயக் சென். இவர் மருத்துவராக இருந்துகொண்டே சமூக சேவையும் செய்து வந்தார். இவர் சமூக சேவகராக இருப்பதால் நக்சலைட்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் இவருடன் தொடர்பு வைத்திருந்தனர். ஆனால் நக்சலைட்களுக்கு இவர் இணையதளம் வைக்க உதவியதாக தேச துரோக  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சட்டீஷ்கார் மாநில தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் விநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சென் அப்பீல் செய்தார். வழக்கு விசாரணை இருக்கும்போதே சென்னுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதை பெரும்பாலானோர் வரவேற்று உள்ளனர். காங்கிரஸ் கட்சியும் இதை வரவேற்று உள்ளது. சென்னுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் நேற்று போபாலில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். விநாயக் சென் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்