முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெடரேசன் டென்னிஸ்: இந்திய அணிக்கு சானியா தலைமை

புதன்கிழமை, 26 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 26 -  பெடரேசன் கோப்பை டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்தி ய மகளிர் அணிக்கு சானியா மிர்சா தலைமை தாங்குகிறார்.  பெடரேசன் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான ஆசிய ஓசியானியா குரூப் - 1 போட்டி கஜகஸ்தான் நாட்டி ல் நடக்க இருக்கிறது. 

இதற்காக 4 பேர் கொண்ட இந்திய மக ளிர் அணியை அகில இந்திய டென்னி ஸ் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன் பு அறிவித்தது. 

இந்திய மகளிர் அணிக்கு சானியா மிர் சா தலைமை தாங்குகிறார். இதில் சா னியா தவிர, கைரா ஷ்ராப், ருடுஜா போஸ்லே, மற்றும் ரிஷிகா சுங்காரா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். மகளிர் அணியில் மாற்று வீராங்கனைகளாக பிரேமா பாம்ப்ரி மற்றும் அங்கி தா ரெய்னா ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். 

இந்திய அணி கடந்த ஒரு ஆண்டு கால மாக குரூப் - 2 பிரிவில் ஆடிக் கொண்டு இருந்தது. தற்போது குரூப் --1 பிரி விற்கு முன்னேறி உள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் பெடரேசன் கோப்பைக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 2- 1 என்ற கணக் கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி குரூ ப் - 2 வுக்கு தகுதி பெற்றது. 

பெடரேசன் கோப்பைக்கான இந்த வருட ஆட்டம் கஜகஸ்தான் நாட்டில் உள்ள அஸ்தானா என்ற நகரில் பிப்ரவ ரி மாதம் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago