முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனாமி நினைவு தினம்: கடற்கரையில் மக்கள் கண்ணீர் அஞ்சலி

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி தாக்கியதன் 8-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நேற்று ஒன்றாக திரண்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

2004 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சுனாமியின் கோர தாண்டவம் ஆடியது இந்த நாளில்தான். சுனாமியால் ஏற்பட்ட துயரமும், மக்களின் ஓலமும் காலங்கள் கடந்தாலும் இன்னமும் நம் மனதில் சோகங்களைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது.

கடற்கரையை ஒட்டியுள்ள சுமார் 418 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின. அங்கு வசித்த 8 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் தங்களின் உடமைகளை இழந்து தவித்தனர். இந்த சுனாமி தாக்குதலில், காணாமல் போன 846 பேரின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.

தண்ணீரால் அலைக்கழிக்கப்பட்டு கண்ணீரில் முடிந்த சோக கதையை யாராலும் மறக்க முடியாது. அந்த கோர சுனாமி ஆழிப் பேரலையின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதையொட்டி சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடற்கரை பகுதிகளில் நடந்தது.

சென்னை கடற்கரையில் மேயர் சைதை துரைசாமி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

சென்னை மரினா கடற்கரையில்  சுனாமியால் இறந்தவர்களுக்கு    கடலில் nullக்களை தூவி அஞ்சலி செலுத்தினர். பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், காசிமேட்டில் டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ.,மற்றும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். துறைமுகம் போன்ற இடங்களில் காலையிலேயே குவிந்த மீனவர்கள், மெழுகுவர்த்தி ஏற்றி, மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடலில் nullக்களை மிதக்க விட்டு கடல் அன்னையை வணங்கினர். அஞ்சலி செலுத்தும்போது பெண்களில் பலர் கதறி அழுதனர். இறந்த உறவினர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களுக்கு விருப்பமான உணவுப் பொருட்களை வைத்து கடற்கரையில் nullஜைகளும் நடத்தப்பட்டன. இதேபோல தமிழகம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் மீனவர்கள்  கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினம் என்பதால், பெரும்பாலான மீனவர்கள் .நேற்று கடலுக்கு செல்லவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்