முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலு நாச்சியாரின் 216-வது நினைவு நாள் பொதுக்கூட்டம்

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 216 வது நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்திய விடுதலைக்குப் போராடிய முதல் வீராங்கனை சிவகங்கை வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் 216 வது நினைவுநாள் பொதுக்கூட்டம் நேற்று சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூவேந்தர் முன்னணி கழக நிறுவனத் தலைவர் டாக்டர் என்.சேதுராமன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ச.இசக்கிமுத்து விளக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

வீரமங்கை வேலு நாச்சியார் சிறுவயதில் முதல் திறமையான பயிற்சிகளை மேற்கொண்டவர். மேலும் பல்வேறு மொழிகளை கற்றுத் தேர்ந்தவர் ஆவார். அதேபோல் நமது முதல்வர் ஜெயலலிதாவும் பல்வேறு மொழிகளை கற்றுத் தேர்ந்தவர். வீரமங்கை வேலு நாச்சியார் பல போர்க்களம் கண்டு எதிரிகளை விரட்டி அடித்தவர். அதேபோல் முதல்வர் ஜெயலலிதாவும் தேர்தல்களம் பல கண்டு எதிரிகளை வீழ்த்தியவர். அன்று அந்நிய நாட்டினரை எதிர்த்து போராடியவர் வேலு நாச்சியார். ஆனால் இன்று ஜெயலலிதா அந்நிய முதலீடுகளை அனுமதிக்க முடியாது என்று இப்போது போராடிக்கொண்டிருக்கிறார். வால்மார்ட் நிறுவனத்தை இங்கே அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-

வீரமங்கை வேலு நாச்சியாருக்கு சிவகங்கையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் கேட்டவுடனேயே நிறைவேற்றியவர்தான் முதல்வர் ஜெயலலிதா. கோரிக்கையை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், அதற்கான இடத்தை தேர்வு செய்யுமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டதுடன் ரூ.60 லட்சம் ஒதுக்கி வேலை துவக்கப்பட்டுவிட்டது. வரலாற்றுக்கு வரலாறு படைக்கக் கூடியவர்தான் முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு அமைச்சர் கோகுல இந்திரா பேசினார்.

முன்னதாக தென்சென்னை மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றுப் பேசினார். சென்னை மண்டல செயலாளர் பெரியதுரை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் கரு.நாகராஜன், ஷேக்தாவுத், சரஸ்வதி ரங்கசாமி, என்.கே.வத்சலா, எம்.ஆர்.லிங்கம், பெரியசாமி பாண்டியன், ஜாக்குவார் நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago