முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., அணிக்கு எதிரான முதல் டி-20 யில் தோல்வி ஏன்?

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், டிச. 27 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெங்க ளூரில் நடைபெற்ற முதலாவது டி - 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான விளக்கத் தை கேப்டன் தோனி அளித்து இருக்கிறார். 

பாகிஸ்தான் அணி நீண்ட வருடத்திற்கு ப் பிறகு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து கேப்டன் தோனி தலைமையி லான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையே இரண்டு டி - 20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. 

பெங்களூரில் நடைபெற்ற முதலாவது டி - 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

இந்தப் போட்டி குறித்து கேப்டன் தோனியிடம் கேட்ட போது, மேலும், 10 அல்லது 15 ரன்கள் எடுத்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் . தோல்வி க்கு இதுவும் ஒரு காரணம் என்றார் அவர். 

பெங்களூரில் நடந்த முதல் டி -20 யில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெ ட் இழப்பிற்கு 133 ரன் எடுத்தது. 

இந்திய அணி தரப்பில், துவக்க வீரர்கள் நல்ல துவக்கத்தை அளித்தனர். ஆனால் பின்பு வந்த வீரர்கள் இதனை பயன்படு த்தவில்லை. அவர்கள் குறைந்த ரன்னி ல் ஆட்டம் இழந்தனர். இதுவே தோல் விக்கு முக்கிய காரணமாகும். 

துவக்க வீரர் காம்பீர் 41 பந்தில் 43 ரன் னையும், ரகானே 31 பந்தில் 42 ரன்னையும் எடுத்தனர். இந்த ஜோடி முதல் விக் கெட்டிற்கு 77 ரன் சேர்த்தது. 

பின்பு ஆடிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன் னை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. 

இந்தத் தோல்வி குறித்து கேப்டன் தோனி கூறியதாவது - இந்திய அணியின் துவக்க ஆட்டம் நன்றாக இருந்த து. துவக்க வீரர்கள் நன்கு ஆடி ரன் குவி த்தார்கள். 

இதனால் எங்கள் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்க வில்லை. நாங்கள் கூடுதலாக 10 அல்லது 15 ரன்கள் எடுத்து இருந்தால் வெற்றி பெற்று இருப்போம். 

145 ரன்கள் வரை எடுத்து இருந்தால் அது பாதுகாப்பான ஸ்கோராக இருந் திருக்கும். பாகிஸ்தானின் துவக்க வீரர் கள் முதலிலேயே வீழ்ந்து விட்ட நிலை யில், ஹபீஸ் மற்றும் மாலிக் இருவரும் நன்கு ஆடி பாகிஸ்தானை வெற்றி பெற வைத்து விட்டனர். 

நமது வேகப் பந்து வீச்சாளர்கள் ஆரம் பத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். அது தொடர்ந்து நீடித்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த வெற்றி குறித்து பாக். கேப்டன் ஹபீஸ் தெரிவித்ததாவது - இந்தியாவு க்கு எதிராக நல்ல தொடக்கத்தை கொ டுக்க வேண்டும் என்று விரும்பி னோம். 

ஆனால் எங்கள் தொடக்க வீரர்கள் முத லிலேயே வீழ்ந்து விட்டதால் எங்களு க்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. பின் பு இந்த சரிவை நாங்கள் ஈடுகட்டிவிட்டோம். 

இதைவிட சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைத்தோம். இனி வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். இந்த வெற்றியை எங்கள் நாட்டுக்கு பரிசாக வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்