முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. மவுனம் சாதிப்பது ஏன்? நாஞ்சில் சம்பத் கேள்வி

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

அரக்கோணம், டிச. 27 - உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று தமிழக முதல்வர் கேட்ட பின்னரும் அதை எதிரி நாடான பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அனுப்பி வருகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க. மத்திய அமைச்சர்கள் மவுனமாக இருப்பது ஏன் என்று அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார். 

அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது, 

பாகிஸ்தான் நமது எதிரி நாடு என்று நாம் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் பாகிஸ்தானுக்கு உபரி மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட்டை மத்திய அரசு அனுப்புகிறது. டெல்லியில் உபரி மின்சாரம் இருக்கிறது. அதை தமிழகத்திற்கு அளியுங்கள் என்று தமிழக முதல்வர் கேட்டும் அதை மத்திய அரசு மறுத்து வருகிறது. காரணம் தமிழகத்துக்கு மின்சாரம் தருவதை தி.மு.க. தலைவர் கருணாநிதி விரும்பவில்லை. 

பாகிஸ்தானுக்கு மின்சாரம் தரப்படுவதை அறிந்தும் மத்திய அரசில் பதவி வகிக்கும் தமிழக அமைச்சர்கள் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்? அதை தந்து விட்டால் வரும் மக்களவை தேர்தலில் அவர்கள் செல்லாக்காசாகி விடுவார்கள் என்பதால்தான். இப்போது தமிழக அரசுக்கு மின்சாரம் மட்டுமே முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதுவும் தீர்ந்து விட்டால் எப்படி தேர்தலை சந்திப்பது என்பதற்காக தி.மு.க அமைச்சர்களாலேயே தமிழகத்திற்கு மின்சாரம் தருவது தடை செய்யப்படுகிறது. காவிரி டெல்டா மக்களின் குறைகளை களைய தமிழகத்துக்கு அதிக மின்சாரம் கொண்டு வர மின் உற்பத்தியை அதிகரிக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிடுகிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்