முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை அவமானப்படுத்தியது மத்திய அரசின் திட்டமிட்ட சதி

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - மத்திய அரசின் திட்டமிட்ட சதி . என்னை பேசவிடாமல் செய்தது என்னை அவமானப்படுத்தியது இல்லை, தமிழக மக்களை அவமானப்படுத்தியதாகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். டெல்லி சென்று திரும்பய அவர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசை எதிர்க்கும் மாநில முதல்வர்களின் குரலை தடுப்பதற்காக மத்திய அரசு மிகப்பெரிய சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு எங்கள் குரலை கேட்கத் தயார் இல்லை என்றால் இத்தகைய கூட்டத்திற்கு எதற்கு எங்களை அழைக்கவேண்டும். டெல்லிக்கு வருமாறு ஏன் கூறவேண்டும். மத்திய அரசிடம் சகிப்பு தன்மை இல்லை என்பதே இந்த கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சி தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

உங்கள் கேள்விகளுக்கு மரியாதைக்காக நான் பதில் சொல்கிறேன். மத்திய அரசுக்கு சகிப்பு தன்மை இல்லை அராசகம் மற்றும் அராஜகத்துடன் நடந்து கொள்வது, மத்திய அரசை எதிர்க்கும் மாநில முதல்வர்களின் குரல்களை கேட்க தயாராக இல்லை. குரிகிய காலத்தில் பத்தே நிமிடத்தில் தமிழ்நாடு போன்ற மிகப்பெரிய மாநிலத்தில் பிரச்சினைகளை, விருப்பங்களை, கருத்துக்களை எந்த முதல்வரும் எடுத்துக்கூறுவது என்பது இயலாத ஒன்று. 

இன்று நடந்த சம்பவம் எப்போதும் நடைபெறாத ஒன்று. 1991-ம் ஆண்டில் இருந்து நான் முதலமைச்சாரக இருந்து வருகிறேன். இத்தகைய பல கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். மேலும் பிரதமர் தலைமை தாங்கியுள்ள பல்வேறு மாநாடுகளிலும் கலந்துள்ளேன்.

இதுபோல ஒரு முதலமைச்சரின் பேச்சின்போது குறுக்கிட்டு பேச்சை நிறுத்தச்செல்லி மணி அடிக்கும் வழக்கம் முன் எப்போதும் நடந்தது இல்லை. எந்த குறுக்கீடும் இல்லாமல் மத்திய அரசுக்கு சாதமான முதலமைச்சர்கள் 30 நிமிடங்களும், 40 நிமிடங்களும் பேச அனுமதிக்கப்படடார்கள். 

இதை எல்லா முதல்வர்களும் கண்கூடாக கண்டார்கள். இதற்கு முன் நடந்த கூட்டத்தில் நாங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ஆனாலும் பேச அனுமதிக்கப்பட்டோம். இந்த கூட்டத்தில் என்னை போன்றவர்கள் பேச அனுமதிக்கபடாமல் அராஜகம் நடந்ததது. எங்களை பேச அனுமதிக்க தயாராக இல்லை. மணி அடித்து எங்களை துன்புறுத்தவேண்டும் என்று எண்ணி இருக்கிறார்கள். நான் பேச்சை குறைத்து பேசலாம் என்று எண்ணியிருந்தேன். 

அதனால்தான் இந்த கூட்டத்தில் முதல்வர்களுக்கு மரியாதை இல்லை என்று கூறுகிறேன். இத்தகைய கூட்டத்திற்கு செல்லும்போதெல்லாம் மக்களின் கோரிக்கைகளை தவிர என்னுடைய தனிப்பட்ட கோரிக்கைகளை நான் முன்வைப்பது இல்லை. மத்திய அரசிடம் நான் கேட்பதை மற்றும் நான் கேட்கும் கோரிக்கைகள் அனைத்தும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் மட்டுமே.

அவர்கள் என்னை நடத்திய விதம் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியது ஆகாது. தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தியதாகும். எனவே குறுக்கீட்டால் ஏற்பட்ட சத்தங்களை அடுத்து நான் வெளியேற முடிவு செய்தேன். பள்ளிக் குழந்தையைபோல நான் நடத்தப்பட்டுள்ளேன். அங்குதான் பள்ளிக்குழந்தைகள் பேசும்போது பேச்சை குறைக்க மணி அடிக்கப்படும். பேச்சை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து மணி அடிக்கப்படும். மத்திய அரசினால் ஒரு முதலமைச்சர் இவ்வாறு நடத்தப்படும் நிலைமைக்கு எந்த முதலமைச்சர் ஆளானது இல்லை.

இத்தகைய சம்பவம் முன்பு நடந்தது இல்லை. அவர்கள் ஆரம்பித்திருக்கிற புதிய நிகழ்ச்சி இதுவாகும். நான் கடைசியாக கலந்து கொண்ட டெல்லி கூட்டத்தில் அஜாம் முதலமைச்சர் 30 நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டார். 

மற்ற முதல்வர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. முதலில் முதலில் பேச அழைக்கப்பட்ட எனக்கு இவ்வாறு நடந்துள்ளது. அதற்பின் நான் வெளிநடப்பு செய்தேன். பின்னர் நடந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்