முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரிய மின் சக்தியில் உலகிலேயே முதலிடம் பெறுவோம்

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.28 - கடந்த ஆட்சியால் ஏற்பட்ட மின் பற்றாக்குறையை சமாளிக்க உறுதியான முடிவு எடுத்துள்ளோம். சூரிய மின் சக்தியில் உலகிலேயே 2015-ல் முதலிடம் பெறுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

தற்போது நிறைவேறி வரும் மின் உற்பத்தி மற்றும் பரிமான திட்டங்களை குறித்த காலத்தில் முடிப்பதற்கு தமிழ்நாடு அரசு பல நெருக்கடிக்கு இடையில் ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்கொண்டுள்ளது. 2015 -ல் மீண்டும் உபரி மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு பல குறுகிய கால திட்டங்களையும் மேற்கொண்டுள்ளோம். வினியோக நிறுவனங்களுக்கு நிதி உதவி மறுசீரமைப்பு திட்டம் நீண்ட கால பிரச்சனையாக இருந்துவந்துள்ளது. எவ்வாராகினும் நிதி உதவி பொறுப்பு மற்றும் வரவு செலவு பராமரிப்பு வரம்புகள் ஆகியவற்றை தீவிரமாக அமல்படுத்த வேண்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணத்தை உயர்த்த என்னுடைய  தலைமைலான அரசு பல துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எங்கள் ஆட்சியில் எற்படாத கடந்த ஆட்சி விட்டுச் சென்ற பிரச்சனைகளால் ஏற்பட்ட மின் நெருக்கடியை சமாளிப்பதற்கு என்னுடைய அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையையே இது காட்டுகிறது. 

 தமிழ்நாடு 2015 -ல் 3000 மெகாவாட் சூரிய மின் சக்தியை பெற்று உலகிலேயே முதலாவதாக திகழும் வகையில் தமிழகத்தின் சூரிய மின் சக்தி திட்டம் 2012 அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் நிறைவேற்றிய மழைநீர் சேமிப்பு திட்டத்தை போல சூரிய மின் சக்தி திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்ற என்னுடைய அரசு முடிவெடுத்துள்ளது. எங்களுடைய இத்தகைய முயற்சிகளுக்கு நிதி அடிப்படையிலும் சரியான கொள்கை முடிவுகளாலும் மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்