முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் திமுக கோஷ்டி மோதல்: கடைகள் அடைப்பு

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

பரமக்குடி. டிச.28  - பரமக்குடியில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அட்டையை தேர்தல் ஆணையர் ஆலந்தூர் பாரதி ஆற்றுப் பாலம் அருகிலுள்ள சன் டவர் லாட்ஜில் வைத்து  வழங்கினார். 

இதைத் தொடர்ந்து விடுபட்டவர்கள் குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலந்தூர் பாரதி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ரித்தீஷ் எம்.பி. ஆதரவாளர்கள் சன் டவர் லாட்ஜ்க்கு சென்றனர். 

அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் ஆதரவாளர்கள், ரித்தீஷ் எம்.பி. ஆதரவாளர்களை லாட்ஜூக்குள் விடாமல் தடுத்தனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த  ரித்தீஷ் எம்.பி.  ஆதரவாளர்கள், சன் டவர் லாட்ஜ் மீது கல் வீசித் தாக்கினர். பின்னர் அங்கு நின்ற முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் செந்தில் என்பவரது காரை அடித்து நொறுக்கினர்.

இதையறிந்த போலீஸார் அங்கு சென்றதும் கலவரத்தில் ஈடுபட்ட  ரித்தீஷ் எம்.பி. ஆதரவாளர்கள் கலைந்து ஓடினர். இதையடுத்து பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.

இதுபற்றி முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் திவாகர், பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில்  ரித்தீஷ் எம்.பி. அவரது  ஆதரவாளர்கள், நாகராஜ் உள்பட 11 பேர் மீதும், கருணாநிதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில்,  ரித்தீஷ் எம்.பி.  ஆதரவாளர்கள்   நாகராஜன், உலகநாதன் உள்பட 23 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல்  ரித்தீஷ் எம்.பி.  தரப்பைச் சேர்ந்த முனியசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் தங்கவேலன் மகன்கள் திவாகர், சம்பத், செந்தில்குமார் மற்றும் கடலாடி ராஜசேகர், தூவல் முத்துராமலிங்கம், பரமக்குடி துரைச்சாமி மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்