முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயத்துறை வளர்ச்சி எனது ஆட்சியில் 7.08 சதவிகிதம்

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - விவசாயத்துறையில் மத்திய அரசின் 16-வது ஐந்தாண்டு திட்டத்தின் செயல்பாடு ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த ஆண்டில் இத்துறையில் 2.8 சதவிகிதம் வளர்ச்சி மற்றுமே கிடைத்துள்ளது. ஆனால் தமிழ்நாடு என்னுடைய தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் அதேதுறையில் 7.08 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. 

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியினாலேயே இந்நிலையில் ஏற்பட்டது. ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணை மேம்பாடு ஆகிய திட்டங்களை கொண்டு இரண்டாவது பசுமை புரட்சியை நான் முன்வைத்தேன்.

முன் எப்போதும் இல்லாத மாநில அரசின் திட்டங்களான கரவை பசுக்கள், செம்மறிஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்குவதாலும், 14 ஆயிரத்து 564 கிராமங்களிலும் உழவர் பெருவிழா நடத்துவதன் மூலமாகவும், விவசாயத்துறையில் உயர் வளர்ச்சியை அடையமுடிந்தது. 

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவிலான பாசனத்திட்டமே உள்ளது. இத்துறையில் மத்திய அரசின் திட்டத்தால் ஓராளவு பணவீக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடிகிறது. மத்திய அரசின் குழப்பமான வெளிப்படை அற்ற ஊட்டசத்து அடிப்படையான மானியத்திட்டத்தால் விவசாயிகளுக்கு இடையூறுதான் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் விவசாய விளை பொருட்களில் மதிப்பு கூட்டுவரியில் விளக்கு அளித்ததன் மூலம் விவசாயிகளின் விலைச்சுமையை குறைத்துள்ளோம்.

நீர்பாசனம் ஒரு முக்கியமான பிரச்சினை. காவேரி, பெண்ணையாறு, முல்லைப்பெரியாறு அணை, அட்டபட்டி அணை பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுமாறு நாங்கள் மீண்டும் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தியது வெறுமையில் முடிந்தது. பாசன வசதியை மேம்படுத்தவும், வெள்ளத்தடுப்பாகவும், ஒரு நீர்வழித்தடத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக நதிகளுக்கு இடையேயான இணைப்பு குறித்த பிரச்சினை நாங்கள் எழுப்பி வருகிறோம். 

இத்தகைய தேசிய அளவிலான முயற்சியில் மத்திய அரசின் ஆதரவு ஏமாற்றத்தை அளிக்கிறது. இதில் மத்திய மத்திய அரசின் உண்மையான ஆதரவு எதுவும் இல்லை. இந்த முக்கிய பிரச்சினையில் 12-வது ஐந்தாண்டு திட்டத்திலும், மெளனமே இடம் பெற்றுள்ளது. 

நீர்பாசன பயன்திட்டம் மிகவும் விரக்தி அளிக்கக்கூடியது. சிறிய நீர்பாசனம், நீர்பாதுபாதுகாப்பு ஆகியவை 21-ம் நூற்றாண்டின் மிக முக்கிய பிரச்சினையாகும். ஆகவே மேற்கொண்ட திட்டத்தை மறு சீரமைப்பு செய்யவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். மிக உயர்ந்த நீர்  ஆதாரத்தை வியாபரத்தனம் ஆக்கிவிடக்கூடாது. அமுல்படுத்த முடியாத, வாய் அளவிலான உத்தேச திட்டங்களை காட்டுவதை விட 12-வது திட்ட ஆவணம் மிகவும் உண்மை அடிப்படையில் ஆனதாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன்.

பொருளாதார வளர்ச்சி என்பது மேம்பாட்டுக்கு உரியதாக வறுமையை ஒழிப்பதாக இருக்கவேண்டும்.

தேசிய இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கையின் கடற்படையின் தாக்குதலை நாம் அலட்சியப்படுத்தி விடமுடியாது. ஆழக்கடலில் மீன் பிடிப்பது, மீன் பிடித்துறைமுகங்கள் அமைப்பது ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கவில்லை என்பதையும், வேண்டுகோளாக இங்கு முன் வைக்கிறோம். ஆரம்ப கல்வியை சமத்துவமாக்குவதில் தமிழக அரசு சாதனை புரிந்துள்ளது. உயர்நிலை கல்வியை அவ்வாறு செய்வதற்கு முயற்சி எடுத்து வருகிறது. 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்