முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலைக்கழகங்கள் சிறந்ததாக விளங்க வேண்டும்: ஜனாதிபதி

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை:டிச.29 - இந்திய பல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக 8-வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை காட்டாங் குளத்தூரில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. 

விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

இந்திய பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் கற்றல்,மற்றும் ஆராய்ச்சி துறைகளில் இந்திய பல்கலைக்கழகங்கள் உலக அளவில் தலை சிறந்த கல்வி நிறுவனங்களாக வருவதை இந்திய பல்கலைக்கழகங்கள் நோக்கமாக கொள்ள வேண்டும் வரம்பற்ற கோரிக்கைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களை கொண்டு தனியார் துறை இந்தியாவில் உயர் கல்வியில் பங்களிப்பு செய்வது அவசியம் என்று கூறினார். மற்ற நாடுகளில் தனியார் துறை உயர்கல்வியில் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது.

ஹார்வர்ட், யேல் மற்றும் ஸ்டேன்ஃபோர்டு உள்ளிட்ட பல முன்னணி பல்கலைக்கழகங்கள், தனியார் துறை முயற்சிகளின் விளைவாக இன்று தழைத்து ஓங்குகிறது.

நமது உயர் கல்வி அமைப்பில் சீர்திருத்தம், விரிவாக்கம் மற்றும் மாற்றங்கள் வேண்டும். சிறந்த சேவையை வழங்கும் ஒரு வெளிப்படையான கட்டமைப்பை தனியார் கல்வி துறையில் நிறுவப்பட வேண்டுவது அவசியம் என்று முகர்ஜி கூறினார்.

தமிழ்நாடு ஆளுநர் கே.ரோசையா தமது உரையில், புதுபட்டதாரிகளாகிய நீங்கள் அறிவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உலகமயமாக்கலில் உங்கள் அறிவுர்வமான போட்டி, புதுமை, அர்ப்பணிப்பு என்று  21ம் நூற்றாண்டில் பல சாதனைகளை புரிய வேண்டும். இளைஞர்களாகிய உங்களிடமிருந்து நாடு நிறைய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. உங்கள்  முன்னால் பெரிய வாய்ப்புகள் உண்டு,  அதனை  அடையாளம் கண்டு அதனை உருவாக்குவதில் உங்கள் சீரிய பங்களிப்பு அவசியம். இதனால் நீங்களும் முன்னேறுவீர்கள் மற்றும் நாடும் முன்னேறும் என்று கூறினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் டிஆர்டிஓ இயக்குனர் ஜெனரல் டாக்டர் வி.கே.சரஸ்வத் மற்றும் பி. ஆர். கோயலுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது .

முன்னதாக எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எம் பொன்னவைக்கோ ஆண்டறிக்கை  மற்றும்  வரவேற்புரை நிகழ்த்தினார்.  பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து  தலைமை தாங்கினார்.  இந்த விழாவில் பல்கலைக்கழக சேர்மன் ரவிபச்சமுத்து, தலைவர் சத்ய நாராயணன் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்