முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழ் மாநில தலைவராக தேர்வு

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

ந்தமல்லி, டிச.29 - தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு தேர்தல் ந்தமல்லியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள், தேசிய செயற் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பதவி காலம் முடிவடைந்ததை யொட்டி, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய செற்குழு உறுப்பினர்கள் 39 பேர் ஆதரவுடன் ஒரு மனதாக மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் தமிழக மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க.தேசிய செயலாளர் முரளிதரராவ், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பண்டாருதத்தாத்ரேயா, இல.கணேசன், சி.பி.இராதாகிருஷ்ணன், இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன், முன்னாள் மாநிலத்தலைவர் கே.என்.லட்சுமணன், மாநிலத்துணை தலைவர்கள் எச்.ராஜா, தமிழசை செளந்தராஜன், மாநில அமைப்பு பொதுசெயலார் எஸ்.மோகனராஜிலு, மாநில விவசாய அணி தலைவர் எம்.பாஸ்கரன், கோட்ட அமைப்பாளர் எஸ்.நடராஜன் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். 

இதில் பேசிய பா.ஜ.க.தேசிய செயலாளர் முரளிதரராவ்...

டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கருத்தை கேட்காமல் அவர்களை கூட்டத்தில் பேச விடாமல் ஆட்சேபனை தெரிவித்து அவமதித்துள்ளனர். இதற்க்கு பாரதீய ஜனதா கட்சி மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறது. இது போன்று அரசியலமைப்பு சட்டத்தை மீறிய பிரதமர் கட்டாயம் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பக்கபலமாக இருந்து பா.ஜ.க. ஆதரிக்கும். இது போன்ற காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிஸுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள், என்று பேசினார், 

பொன்.இராதாகிருஷ்ணன் பேசுகையில் மீண்டும் என்னை தமிழக மாநில தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். 

மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் காங்கிரஸ் கட்சி மக்கள் மீது ஏராளமான சுமைகளை திணித்து வருகிறது. பெட்ரோல் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவு, சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தெரியாமல், அன்றாடம் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொள்ளும் நிகழ்வு, டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு, என அனைத்திலும் மத்திய அரசு நிர்வாகம் திறமையின்றி நாட்டை அழிவு பாதைக்கு எடுத்து செல்கிறது, இதனை தடுக்க உறுதியான ஆட்சியை தர மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதனை பயன்படுத்தி கொள்ள பா.ஜ.க தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் வருகின்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்போம் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago