முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய நீர்வளக் கவுன்சில் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.29 - டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய நீர்வளக் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கலந்து கொண்டு தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று தேசிய நீர்வக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய நீர்வளக் கொள்கை 2012 தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் நீர் வளம் தொடர்பான பல்வேறு நிபுணர்களும், நீர்வளத் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ தொண்டு அமைப்பு பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் பாதுகாப்பான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும், நீர் தொடர்பான சேவைகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக நகல் கொள்கையில் இடம் பெற்றுள்ளதை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கலந்து கொண்டார். அவர் தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மத்தியில் நிரந்தர நீர் பங்கீட்டு ஆணையம் அமைக்க தமிழகம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகபேசினார். அவர் பேசியதாவது:தமிழகத்துக்கு தேவைப்படும் நீரில் 80 மழையையே நம்பியுள்ளது. தெற்கு மற்றும் வடக்கிழக்கு பருவ மழை மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டே, தமிழகத்தின் பாசன மற்றும் குடிர் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஆண்டு பருவ மழைகள் பொய்த்துப் போனதால், தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நிலத்தடி ரின் அளவும் குறைந்து, அதன் மூலம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு அணையின் பாதுகாப்பும், அதனை ஆய்வு செய்யும் உரிமையும், அணை அமைந்துள்ள, அதனை பராமரிக்கும் மாநிலத்தின் உரிமையாகும். அதனை மத்திய அரசு எவ்வகையிலும் பறிக்க முயற்சிக்கக் கூடாது.

தமிழக அரசு உலக வங்கி உதவியுடன் நீர் நிலைகள் சீரமைப்பு மற்றும் நிர்வாகத்திட்டம், தமிழக அரசு ஒருங்கிணைந்த வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் போன்றவற்றை நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் பங்களிப்போடு செயல்படுத்தி வருகிறது.

அதேபோல் விஷன் 2023 திட்டத்தின் கீழ் தனீயார் பங்களிப்புடன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு பிரச்சனையில் கீழ் பகுதியில் உள்ள மாநிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

மேல் பகுதி மாநிலங்கள், கீழ் பகுதி மாநிலங்கள் தண்ணீர் பயன்படுத்துவதை எதிர்க்கக் கூடாது. நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள், நடுவர்மன்ற தீர்ப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளால் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை, அரசு நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வர்த்தக ரீதியாக செயல்படும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்  தண்ணீர் சப்ளையை வீடுகளுக்கு வழங்கப்படும் பயன்பாடாக கருதக் கூடாது.

தண்ணீர் மித மிஞ்சி காணப்படும் கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் நீர் பயன்பாட்டு கட்டமைப்பு பலவீனமாக உள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் நீர் பயன்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.

மத்தியில் நிரந்தர நீர் பங்கீட்டு ஆணையம் அமைப்பதற்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஏற்கனவே, நீர் பங்கீட்டு ஆணையம் ஒன்று இயங்கி வரும் நிலையில், இது தேவையற்றதாகும்  என்று அமைச்சர் கே.வி.ராமலிங்கம் வலியுறுத்தினார்.. இதுதவிர தேசிய நீர் கொள்கை 2012-ல் உள்ள குறைபாடுகள், அணை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த விவரங்களையும் பட்டியலிட்டு அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்