முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா குடியிருப்புகள் மீது கடாபி ஆதரவு படை குண்டு வீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

டிரிபோலி,ஏப்.18 - லிபியாவின் குடியிருப்புகள் மீது கடாபியின் ஆதரவு படை குண்டு மற்றும் ராக்கெட்டுகளை வீசி பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. லிபியாவின் மிஸ்ரெட்டா நகரம் ஒன்றுதான் எதிர்தரப்பின் கையில் உள்ள நகரமாகும். அங்கு கடந்த பல நாட்களாக கடாபி மற்றும் எதிர்தரப்பு படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. நகரின் எலிசவடா என்ற பகுதியில் கொத்து குண்டுகள் வெடித்தாக அமெரிக்காவின் நியுயார்க்கை மையமாக கொண்டு செயல்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சில புகைப்படங்களை வெளியிட்டது. 

இந்த புகைப்படங்களை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் சிலர் கூறுகையில், கொத்து குண்டுகளை வீசி அவை ஒன்றின் மீது ஒன்று மோதும் போது அதில் உள்ள பல குண்டுகள் பிரிந்து வெடித்து மக்களை தாக்கும். அதன் மூலம் இரும்பு துண்டுகள் மனித உடலில் ஊடுருவும். போரின் போது கொத்து குண்டுகளை பயன்படுத்த கூடாது என்று 2008 ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் 108 நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், ரஷ்யா, லிபியா ஆகிய நாடுகள் கையெழுத்திடவில்லை. 

இந்த கொத்து குண்டுகள் ஸ்பெயினில் தயாரானவை என்று செய்திகள் வெளியாகின்றன. இது குறித்து ஸ்பெயின் பதில் ஏதும் தரவில்லை. அதே போல் ரஷ்ய ராக்கெட்டுகள் கடாபி படைகளால் வீசப்பட்டன என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் லிபியா அரசு கொத்து குண்டுகளை பயன்படுத்தவில்லை. முடிந்தால் அவர்கள் அதை நிரூபிக்கப்பட்டும் என்று சவால் விடுத்துள்ளது. மிஸ்ரெட்டா நகரில் கொத்து குண்டுகளுக்கு இதுவரை எவ்வளவு பேர் பலியாகினர் என்பது குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்