முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல் - போலீசார் தடியடி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

டமாஸ்கஸ்,ஏப்.18 - சிரியாவில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கம் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். சிரியாவில் கடந்த 2000 ம் ஆண்டு முதல் பஷர் அல் அசாத் அதிபராக உள்ளார். இவர், ஷியா பிரிவில் ஒன்றான அனாவி என்ற சிறுபான்மையினத்தை சேர்ந்தவர். ஆனால் சிரியாவில் சன்னி பிரிவினர்தான் பெரும்பான்மையாக உள்ளனர். பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம். 1963 முதல் அமலில் இருக்கும் அவசர நிலை சட்டத்தை நீக்க வேண்டும். அதிபர் பஷர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிரியாவில் கடந்த 15 ம் தேதி பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 

கடந்த வெள்ளிக் கிழமை தொழுகை முடிந்த பின் தலைநகர் டமாஸ்கஸ், டரா, பனியாஸ், லடாகியா ஆகிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். தலைநகர் டமாஸ்கசில் நடந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு போலீசார் தடியடி நடத்தினர். அதிபர் அசாத் ஆதரவாளர்கள் துப்பாக்கிகளை கொண்டும், தடிகளாலும் எதிரிகளை தாக்கினார்கள். டமாஸ்கசின் பர்ஷே மாவட்டத்தில் ஷலாம் மசூதி முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று மக்களை பயங்கரமாக தாக்கியது. 

இதே போல் பல்வேறு நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் போலீசார் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனால் அரசு டி.வியில் சிறிதளவு மட்டுமே வன்முறை நடந்ததாகவும் போலீசார் தலையிடவில்லை என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் சிரியாவின் எழுச்சிக்கு காரணமான டரா நகரில் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டங்களால் மக்கள் மத்தியில் அதிபர் அசாத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இரு அணிகள் உருவாகி உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago