முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழை

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.30 - வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா பகுதியில் உள்ள கடலோர மாவட் டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீnullர் பெருக்கெடுத்து ஓடியது. வங்க கடலில் இலங்கைக்கு அப்பால் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நேற்றும்  மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து ஆந்திராவையொட்டி உள்ள வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாக  வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் நேற்றுமுன்தினம்   இரவு முதல்  விடிய விடிய  பலத்த மழை கொட்டியது. தரைக்காற்றும் பலமாக வீசுகிறது. இந்த மழை 2 நாட்களுக்கு nullநீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீnullடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்