முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு அவமதிப்பு: இ.சி. கூட்டமைப்பு கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, டிச.30 -​முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்த மத்திய அரசுக்கு சிறுபான்மை பேரவை தலைவர் பிஷப் எம்.பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை போதுமான அளவு கொடுக்காமலும், தேவையான நிதியை ஒதுக்காமலும் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 

இந்த நிலையில் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக்குழு ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் கவலைகளை எடுத்துச்சொல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு போதுமான நேரம் ஒதுக்காமல் 10 நிமிடத்தில் பேசும்படி கூறி அவரை அவமதித்த செயல் உலகத்தமிழர்கள் அனைவரையும் அவமானப்படுத்திய செயலாகும். சிறுபிள்ளைத்தனமாகும். 

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவியாய் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்த மத்திய அரசுக்கு இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு, இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்றம், இந்திய பிஷப்புகள் கவுன்சில் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலத்திட்டங்களை பற்றி பேசவிடாமல் பாதியிலேயே நிறுத்தும்படி மணி அடித்ததால் கூட்டத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது மிகச்சரியானதும், வரவேற்கத்தக்கதும் ஆகும். இந்த விஷயத்தில் அவர் காட்டியிருக்கும் துணிச்சலையும், தமிழக மக்கள் நலனில் அவர் கொண்டிருக்கும் அக்கறையையும், உணர்வையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.

தமிழகத்தின் உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் அதேவேளையில், தமிழக மக்களுக்கு அவமானம் இழைக்கப்பட்டால் அதை சற்றும் பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்காட்டிய முதல்வர் ஜெயலலிதா அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் இமயமென உயர்ந்து நிற்கிறார்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago