முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி பிரச்சினை: என்.ஜி.ஓ. சங்கம் 5-​ந்தேதி போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 30 -​ காவிரி நதிநீர் பிரச்சினைக்காக என்.ஜி.ஓ. சங்கம் 5-​ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக என்.ஜி.ஓ. சங்க மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-​ 

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், காவிரி கண்காணிப்பு குழு உத்தரவின் அடிப்படையிலும் தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை திறந்துவிட மறுத்து இந்திய இறையாண்மையை கேலிக்கூத்தாக்கும் கர்நாடக அரசினை வன்மையாக கண்டிக்கிறோம். 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட நடுவணரசை வலியுறுத்தியும், தமிழகத்தின் உரிமையான காவிரி நீரை பெறுவதற்கு அறப்போரினை துவக்கி போராடி வரும் தமிழக முதல்​ அமைச்சரின் கரங்களை வலுப்படுத்தவும், போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் அரிய லூர் மாவட்டங்களின் சார்பாக வருகிற 5-​ந்தேதி அன்று திருவாரூர் நகரில் மாநிலம் தழுவிய ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. 

உண்ணாவிரத போராட்டத்தில் ஒன்றிய மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்டத் தலைவர்கள், அனைத்து துறைவாரியான சங்க பிரதிநிதிகள், இணைப்புச் சங்க பிரதிநிதிகள், மகளிரணி, இலக்கிய மற்றும் இளைஞரணித் தோழர்கள் மற்றும் அரசு அலுவலர் பெருமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு கர்நாடக அரசிற்கு கண்டனத்தினை தெரிவிக்க உண்ணாவிரதம் இருக்க விருக்கிறார்கள். 

தமிழகத்தின் அனைத்து உரிமைகளுக்காக போராடி வரும் முதல்​அமைச்சரின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இப்போராட்டம் அமையும் என தெரிவித்துக் கொள்வதோடு அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago