முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மாணவி பலி: ச.ம.க தலைவர் சரத்குமார் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.30 - டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரத்தால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்த மருத்துவ கல்லூரி மாணவி தாமிணியின் குடும்பத்திற்கும் சக மாணவ, மாணவிகளுக்கும் அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் பலவந்தமாக பாலியல் பலாத்காரத்தால் பாதிப்புக்குள்ளாகி உடல்நல பாதிப்பால் சிகிச்சை பலனின்றி சிங்கப்பூரில் தாமணி என்ற கல்லூரி மாணவி மரணமடைந்தது அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. நாடெங்கிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் இந்த மிருகத்தனமான பலாத்காரச் செயல்களை கண்டித்து போராட்டங்களும், கண்டனங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நமது நாட்டுப்பெண்கள் வாழ்ந்து வருவது, மகாத்மா காந்தி, பாரதி, பெரியார் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் கண்ட கனவுகளை பொய்யாக்கும் விதமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு கடுமையான சட்டங்கள் மட்டுமே தீர்வாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏற்கனவே சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் இருந்தாலும் அவை இக்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதாகவும், வன்முறையாளர்களுக்கு அச்சம் விளைவிப்பதாகவும் இல்லை என்பதால் இச்செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இத்தகைய கொடுமைகளுக்கு முடிவு கட்ட இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்க சட்டம் கொண்டு வருவது பற்றி முடிவெடுக்க இதுவே ஏற்ற தருணமாகும். பெண்களுக்கு எதிரான வன்புணர்ச்சி மூலம் நிகழ்த்தப்படும் கொலைகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிப்பதே சரியானது என பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் இருக்க இளைஞர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் தகுந்த கலந்தாய்வும், மாணவ, மாணவிகள், பெண்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சிகளையும் கற்றுத்தருவதற்கு அரசும், சமூக அமைப்புகளும் முன்வர வேண்டும். மத்திய அரசு தேசிய அளவில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாதிருக்க மிகக் கடுமையான சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். பலாத்காரத்தால் இறந்த மாணவியின் குடும்பத்திற்கும், உற்றார் உறவினர் மற்றும் சக மாணவ,மாணவிகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை அ.இ.சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago