முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாக் அணி அபாரம் - யுவராஜ் அணி பரிதாபம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஏப்.18 - மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல்.போட்டி ஒன்றில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐ.பி.எல். போட்டிகளின் 16 வது ஆட்டம் மும்பை பட்டேல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் யுவராஜ் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும், சேவாக் தலைமையிலான சேவாக் அணியும் மோதின. டாஸ் வென்ற சேவாக் பீல்டிங்கை தேர்வு செய்தார். புனே அணியின் துவக்க வீரர்கள் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் ஸ்மித் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஸ்மித் சோபிக்கவில்லை. 12 ரன்களை எடுத்த அவர் டிண்டாவின் பந்தில் வீழ்ந்தார். அடுத்து மன்ஹாஸ், ரைடருடன் ஜோடி சேர்ந்தார். ரைடர் அதிரடியாக 24 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். புனே அணி 82 ரன்களை எடுத்திருந்தபோது 20 ரன்களை எடுத்திருந்த மன்ஹாஸ், ஹோப்ஸின் பந்தில் வார்னரால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதைத் தொடர்ந்து ரைடருடன், யுவராஜ் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ரைடர், நதீமின் பந்துவீச்சில் பின்ச்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் யுவராஜ்சிங் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே வாரியர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. யுவராஜ்சிங் ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். டெல்லி அணி சார்பாக நதீம், டிண்டா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

188 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி அணி. அந்த அணியின் சேவாக் மற்றும் வார்னர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அணியின் எண்ணிக்கை 75 ஆக இருந்தபோது வார்னர் 46 ரன்களில் ரன் அவுட்டானார். தொடர்ந்து பதான் களமிறங்கினார். சேவாக் 37 ரன்களை எடுத்திருந்தபோது ரைடரின் பந்தில் கிளீன் போல்டானார். அப்போது டெல்லி அணி 9.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை எடுத்திருந்தது. இதன்பிறகு இர்பான் பதான், ஓஜா, வாடே ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தாலும் வேணுகோபால் ராவ் மற்றும் பின்ச் ஆகியோர்  பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி ரன்களை குவித்தனர். இதன் காரணமாக டெல்லி அணி இலக்கை நெருங்கியது. இந்த நிலையில் 25 ரன்களை எடுத்திருந்த பின்ச் யுவராஜ் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து அவுட்டானார். தொடர்ந்து  20 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்த வேணுகோபால்ராவ் விக்கெட்டை பறிகொடுத்தார். இவரையும் யுவராஜ் சிங்கே வீழ்த்தினார். இறுதியில் டெல்லி அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹோப்ஸ் ஆட்டமிழக்காமல் 13 ரன்களுடனும், நதீம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 

66 ரன்களை எடுத்ததோடு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய யுவராஜ்சிங் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெல்லி அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் தற்போதுதான் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. புனே அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் முதலாவது தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago