முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் கல்வியியல் பல்கலை பட்டமளிப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. தமிழக கவர்னர் ரோசய்யா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தலைவர் முனைவர் எஸ்.எஸ்.ஜெனா, உயர்கல்வி துறை செயலர் அபூர்வா, பல்கலைக்கழக துணைவேந்தர் கே.விஸ்வநாதன், பதிவாளர் விஸ்வலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் 2010 -2011-ம் கல்வியாண்டில் பி.எட் மாணவர்கள் 5853 பேருக்கும், எம்.எட் மாணவர்கள் 3131 பேருக்கும், எம்.பில் மாணவர்கள் 7 பேருக்கும், 2011- 2012-ம் கல்வியாண்டில் பி.எட் மாணவர்கள் 55792  பேருக்கும், எம்.எட் மாணவர்கள் 2705 பேருக்கும் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 481 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டது.

2011- 2012-ல் எம்.எட்டில் கோயம்புத்தூர் மாணவி எஸ்.கலைச்செல்வி முதல் மதிப்பெண் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 நிகழ்ச்சியில் அமைச்சர் பி.பழனியப்பன் பேசியதாவது:-

நீங்கள் அனைவரும் குறிப்பிட்ட துறையான ஆசிரியர் துறையை தேர்ந்தெடுத்து சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஆசிரியர் துறையில் பட்டம் பெற்றிருக்கிறீர்கள்.மாணவர்களுக்கு ஒழுக்கம், நீதி போதனைகள் சொல்லிக்கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். எனவே அவர்கள் அந்த ஒழுக்கத்தையும் கடைபிடிக்க தவறக்கூடாது. எதிர்கால இந்தியாவை உருவாக்கக்கூடியவர்கள் மாணவர்கள். அந்த மாணவர்களை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள். குறுகிய காலத்தில் 42 புதிய கல்லூரிகளை உருவாக்கிய பெருமை நமது தமிழக முதல்வரையே சாரும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்