முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: மைக்கேல் கிளார்க் முதலிடம்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், டிச. 31 -  ஐ.சி.சி.யின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் முதலிட ம் பிடித்து சாதனை படைத்து இருக்கிறார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் டெ ஸ்டில் அதிக புள்ளிகள் (900) பெற்று முதலிடம் பெற்று இருக்கிறார். இது அவர் பதித்த புதிய மைல் கல்லாகும். சமீபத்தில் வெளியான பட்டியலில் இது தெரிய வந்துள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் போ  ட்டி நடந்தது. சமீபத்தில் இலங்கைக்கு எதிராக மெல்போர்னில் நடந்த டெஸ் டில் ஆஸி. இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 201 ரன் வித்தி யாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தத் தொடரில் 2- 0 என்ற கணக்கில் அசைக் க முடியாத முன்னிலை பெற்று உள்ளது. 

இந்த டெஸ்ட் துவங்குவதற்கு முன்பா க கிளார்க் 888 புள்ளிகள் பெற்று இருந் தார். 2 -வது டெஸ்டில் அவர் சதம் (106) அடித்ததன் மூலம் 12 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 

இதன் மூலம் இந்த அரிய சாதனை படைத்த 7-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பாக டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹெய்டன், டக்வால்டர்ஸ், நெய்ல் ஹார்வி மற்று ம் மைக் ஹஸ்சே ஆகியோர் 900 புள்ளி களுக்கு மேல் பெற்று சாதனை படை த்த மற்ற வீரர்களாவர். 

தவிர, இந்தஆண்டு டெஸ்ட் போட்டி யில் புதிய சாதனை படைத்த கிளார்க் கிற்கு இது மகிழ்ச்சியை அளித்துள்ளது . 

2012 -ம் ஆண்டில் கிளார்க் 11 டெஸ்டில் ஆடி மொத்தம் 1,595 ரன் குவித்து இருக் கிறார். இதன் மூலம் இந்த ஆண்டு அதி க ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். 

இதற்கு முன்னதாக முன்னாள் கேப்ட ன் ரிக்கி பாண்டிங் ஒரே ஆண்டில் அதி க ரன் எடுத்து சாதனை படைத்து இருந்தார். கிளார்க் அதனையும் முறியடித்து இருக்கிறார். 

2012 -ம் ஆண்டு கிளார்க் ஏற்கனவே முச்சதமும், மூன்று இரட்டை சதமும் அடித்து சாதனை படைத்து இருந்தார். 

மேலும் மெல்போர்ன் டெஸ்டில் அவர் சதம் அடித்தார். இது இந்த ஆண்டு அவ ருக்கு 5-வது சதமாகும். ரேட்டிங் புள்ளி கள் 900 ஆகும். 

ஐ.சி.சி.யின் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஒட்டு மொத்தத்தில் 900 புள்ளி கள் பெற்று சாதனை படைத்த வீரர்களி ல் மைக்கேல் கிளார்க் 26-வது இடத்தில் இருக்கிறார். 

தவிர, மெல்போர்ன் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற மிட்செல் ஜா ன்சன் சமீபத்திய தரவரிசையில் ஆல்ர வுண்டராக முத்திரை பதித்து இருக்கிறார். 

ஜான்சன் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 63 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். 2-வது இன்னிங்சி ல் 16 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத்தார். இதன் மூலம் பெளலர்கள் தரவரிசையில் அவர் டாப் 20 யில் இட ம் பெற்று இருக்கிறார். ஜான்சன் 3 இட ம் முன்னேறி 18 -வது இடத்தில் இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்