முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வே மின் பற்றாக்குறைக்கு காரணம்: அ.தி.மு.க. தீர்மானம்

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 -  தி.மு.க.வே மின் பற்றாக்குறைக்கு காரணம் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தீர்மானங்கள் விவரம் வருமாறு:- 2006​ஆம் ஆண்டு வரை மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை, மின் குறை மாநிலமாக ஆக்கி தமிழகத்தின் மின் நிலைமையையும், தமிழ் நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமையையும் சீரழித்த பெருமை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசையே சாரும். 

தற்போது தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களாக விளங்குபவை, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு பிற மாநிலங்களுடன் நீண்டகால அடிப்படையில் மின் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்யாததும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வரும் தேவைக்கேற்ப 2001-​2006 ஆம் ஆண்டுகளில் கழக ஆட்சியில் துவங்கப்பட்ட மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தாததும், புதிய மின் திட்டங்களை துவங்காததுமே ஆகும். 

இதன் விளைவாக, 2011​ஆம் ஆண்டு ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கும் போது, மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையே கிட்டத்தட்ட 4,000 மெகாவாட் இடைவெளி இருந்தது. 

தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டினை உணர்ந்த ஜெயலலிதா தமிழகத்தின் 

மின் தேவையை விரைந்து ர்த்தி செய்யும் வகையில், மெத்தனமாக செயல்பட்டு வந்த மின் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.    

தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவால் எடுக்கப்பட்ட போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் காரணமாக, 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் மற்றும் 500 மெகாவாட் மின்திறன் கொண்ட வல்லூர்  மின் திட்டத்தின் முதல் அலகு டிசம்பர் 2012​ல் இருந்தும், 500 மெகாவாட் மின் திறன் கொண்ட வல்லூர் மின் திட்டத்தின் இரண்டாவது அலகு மார்ச் 2013​ல் இருந்தும், 

600 மெகாவாட் மின் திறன் கொண்ட வட சென்னை அனல் மின் திட்டத்தின் முதல் அலகு ஏப்ரல் 2013​ல் இருந்தும், 600 மெகாவாட் மின் திறன் கொண்ட வட சென்னை அனல் மின் திட்டத்தின் இரண்டாவது அலகு மே 2013​ல் இருந்தும், 500 மெகாவாட் மின் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்றாவது அலகு அக்டோபர் 2013​ல் இருந்தும், 

தலா 500 மெகாவாட் திறன் கொண்ட தூத்துக்குடி அனல் மின் திட்டத்தின் இரண்டு அலகுகள் டிசம்பர் 2013​ல் இருந்தும், முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.  இதன் காரணமாக தமிழகத்திற்கு 3,230 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக்  கிடைக்கும். இது தவிர, கூடங்குளம் அணுமின் திட்டத்தில் இருந்து 925 மெகாவாட், மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி  நிறுவனத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத் திட்டத்தில் இருந்து 230 மெகாவாட் கிடைக்கும்.  மொத்தத்தில், 2013​ஆம் ஆண்டு இறுதியில் 4,385 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். 

இது மட்டுமல்லாமல்,  தமிழகத்தின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, 

660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்கத் திட்டம், வட சென்னையில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் திட்டங்கள், 1,600 மெகாவாட் திறன் கொண்ட உப்ர் அனல் மின் திட்டம்,  800 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் விரிவாக்கத் திட்டம், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் மாற்று மின் திட்டம்  

ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ் நாடு முதலமைச்சர்ஜெயலலிதா எடுத்து வருகின்றார். 

இது தவிர, உடன்குடியில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் திட்டங்களை தமிழ் நாடு மின்சார வாரியமே மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். 

இவற்றையெல்லாம், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பட்டியலிட்ட தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 2013​ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழ் நாட்டில் மின் தடை அறவே க்கப்பட்டுவிடும் என்றும், தமிழகம் விரைவில் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என்றும், தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்காமல் ஓய மாட்டேன் என்றும் சூளுரைத்தார்.    

முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவதற்காக பொறுப்புடனும், கடமை உணர்வுடனும் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்ததற்கு ஏற்ப, 600 மெகாவாட் மின் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டத்தையும், 500 மெகாவாட் மின்திறன் கொண்ட வல்லூர் மின் திட்டத்தின் முதல் அலகினையும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதையும், இதன் காரணமாக மின் வெட்டு ஓரளவு குறைந்து உள்ளதையும் தமிழக மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். 

இதே போன்று, அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் உற்பத்தியை தொடங்க இருக்கும் வட சென்னை அனல் மின் திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது அலகுகளுக்கான சுற்றுச் சூழல் அனுமதியை மத்திய அரசு தாமதப்படுத்த முயற்சித்த போது, கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, உடனடியாக பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்றதையும் பொதுமக்கள் உணர்ந்து பாராட்டுகிறார்கள். 

இது மட்டுமல்லாமல், மழை நீர் சேமிப்புத் திட்டத்தைப் போல், சூரிய மின்சக்தி திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில், தமிழ் நாடு சூரிய எரிசக்தி கொள்கை  2012ஐ வெளியிட்டு, 2015​ஆம் ஆண்டுக்குள் 3,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தியை ஏற்படுத்தி, சூரிய மின் சக்தியில் தமிழகத்தை உலகிலேயே முதன்மை மாநிலமாக ஆக்கவும் தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகின்றார். 

தமிழ் நாட்டை மின் உற்பத்தியில் மின் மிகை மாநிலமாக ஆக்க, கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்கால அடிப்படையில் எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்தப் பொதுக்குழு மனதார பாராட்டுகிறது.  

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்