முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1-  நாளை புத்தாண்டு பிறப்பதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி: 

தமிழக முன்னேற்றத்தில் பல தடைக்கற்களை ஏற்படுத்திய 2012ஆம் ஆண்டு முடிவடையும் வேளையில், புத்தொளிக்கதிர்கள் nullத்திடாதா எனும் ஏக்கத்துடன் 2013ஆம் ஆண்டினை வரவேற்று, தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.  

காவிரி nullர் தமிழகத்திற்குக் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயக் குடும்பங்கள் தத்தளிக்கின்றன. ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் படலம் தொடர்கிறது. தமிழக மக்களுக்கு இத்தகைய எண்ணற்ற இன்னல்களை இழைத்த 2012ஆம் ஆண்டு மறையட்டும்! தமிழக மக்களுக்கு எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்! 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: 

ஒவ்வொரு புத்தாண்டின் பொழுதும் தங்களது வாழ்க்கை மேம்பாடு அடையும் என்ற நம்பிக்கையினாலேயே மக்கள் புத்தாண்டை வரவேற்று விழாவாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் இந்த புத்தாண்டையும் மக்கள் எதிர்நோக்குவது இயல்பானதுதான். 

குடும்பங்களை கட்டிக் காப்பாற்றி மேம்படுத்த போராடும் தாய்மார்களுக்கும், பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வரும் 2013ஆம் ஆண்டாவது வாழ்க்கை சுமை குறையட்டும். தமிழக மக்களும் உலகிலுள்ள மற்ற சமுதாயத்தினரை போல உயர வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்: 

புத்தாண்டு பிறக்கிறது. புதிய பொலிவும் புத்தொளியும் மக்களுக்கு கிடைக்கப் பெற வேண்டும். ஏழை மக்களை சீரழித்து சமூக சீரழிவுக்கு காரணமாயிருக்கிற மதுவை ஒழிப்பதற்கு உறுதியேற்போம். காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட வேண்டும். ராமேஸ்வரம் மீனவர்கள் படும் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும். மின்சாரப் பற்றாக்குறை நீnullங்கி தமிழகம் ஒளிபெறட்டும். 

 பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: 

 நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும். அந்தக் கனவை நனவாக்க வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விடக்கூடாது. அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: 

 இன்னமும் பல்வேறு வடிவங்களில் தமிழ் ஈழத்தில் சிங்களவர் கொடுமை தொடர்கிறது. அது தடுத்து நிறுத்தப்படவும், சிங்களவரின் அடிமை நுகத்தடியில் இருந்து தமிழர்கள் விடுபடவும், சுதந்திரமான தமிழ் ஈழம் அமையவும், அதற்கு உரிய சூழலை அனைத்து உலக சமுதாயம் ஏற்படுத்தி, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் வேண்டி நடவடிக்கைகளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் மேற்கொள்ள 2013ஆம் ஆண்டு உதயத்தில் சூளுரைப்போம்.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி:

ஈழ மண்ணின் தமிழர்களின் துயரமும், அன்றாட அவலங்களைச் சந்திக்கும் தமிழக மீனவ சகோதரர்கள் அனுபவிக்கும் கொடுமையாக 2012​ம் ஆண்டு நகர்ந்தது. வருகிற புத்தாண்டில் இந்நலிவுகள் நீnullங்கி பொலிவுடன் ஓங்கும் ஆண்டாக அமைய நன்னம்பிக்கையுடன் வர வேற்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு:

​புதிய nullதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் , வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார் , 

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், தமிழ்நாடு ஐக்கிய ஜனதா பொதுச்செயலாளர் ராஜகோபால், மதச்சார் பற்ற ஜனதாதள பொதுச் செயலாளர் இதயவண்ணன் உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்