முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்: முதல்வருக்கு வரவேற்பு

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 -  அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சமூகத்தில் முக்கியம் வாய்ந்த பிரமுகர்கள் மறைவுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆகியோர் மறைவுக்கும் இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வருகை தந்த போது வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி நிர்வாகிகள், இளைஞரணி, ஜெயலலிதா பேரவை, மாணவரணி, மகளிரணி, இளம் பெண்கள் மற்றும் இஞைர் பாசறை, தொழிற்சங்கம், எம்.ஜி.ஆர். மன்றம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளை சார்ந்த நிர்வாகிகள் பலர் போயஸ்கார்டன் முதல், வானகரம் வரையிலும் வழிநெடுக வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர்.

அமைந்தகரை, அரும்பாக்கம், மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான மேடைகள் அமைத்து அங்கு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி முதல்வரை வரவேற்றனர். கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளையும், பேண்ட் வாத்தியம், செண்டை மேளங்கள் முழங்கிடவும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஏராளமான மகளிர் கைகளில் சிவப்பு வெள்ளை கருப்பு நிற பலூன்களை வைத்திருந்து முதல்வர் வந்ததும் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி, அந்த பலூன்களை வானில் பறக்கவிட்டனர். சரியாக 10 மணிக்கு செயற்குழு நடைபெறும் அரங்கத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் வி.மூர்த்தி உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, செயற்குழு கூட்டம் தொடங்கியது. செயற்குழு முடிவடைந்ததும், பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

இப்பொதுக்குழுவில் தலைமைக்கழக நிர்வாகிகள், சுலோச்சனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தலைமை நிலைய செயலாளர் பி.பழனியப்பன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளர் வைகைச்செல்வன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.ஆர்.அன்பழகன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு தொடங்கியதும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பி.எச்.பாண்டியன் வரவேற்று பேசினார். பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்து பேசினார். இதனை தொடர்ந்து அவைத் தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம், பா.வளர்மதி, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசினார்கள். இதையடுத்து, அ.தி.மு.க. மாணவரணி செயலாளர், சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகர்கள் மறைவுக்கும், பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தார். மொத்தம் 110 பேர் மறைவுக்கும், விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டியிலும், சேலம் மாவட்டம் மேச்சேரி கிராமத்திலும் பட்டாசு விபத்தில் பலியான 40 பேர் மறைவுக்கும் உரிய இரங்கல் தீர்மானத்தை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் முன்மொழிய, மாணவரணி செயலாளர் சரவணபெருமாள் வாசித்தார்.

பின்னர், இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.இதையடுத்து, அ.தி.மு.க.செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 12 தீர்மானங்களை இளைஞரணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வாசித்தார். மீதமுள்ள 13 தீர்மானங்களை அமைப்புச் செயலாளர் செம்மலை எம்.பி., வாசித்தார். 

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மகளிரணி சார்பில் அமைச்சர் கோகுல இந்திரா, மகளிர் அணி தலைவி சரஸ்வதி ரங்கசாமி, சமூகநல வாரியத் தலைவி டி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் ஆளுயுர மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். 

பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை நினைவு பரிசு ஒன்றையும் அமைச்சர் கோகுல இந்திரா வழங்கினார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாநகர போக்குவரத்துக்கழக அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் கே.எஸ்.அஸ்லம் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்கள் சீருடை அணிந்து கொடிகளுடன் வழிநெடுக நின்று கோஷங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago