முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2 வது குற்றப்பத்திரிக்கை 25 ம் தேதி தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.18 - ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக 2 வது குற்றப்பத்திரிக்கை வரும் 25ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மும்பை தொழிலதிபர் ஜாகித்பல்வா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். தற்போது இது தொடர்பாக மற்றொரு குற்றப்பத்திரிக்கை வருகிற 25 ம்தேதி 2 வது தடவையாக தாக்கல் செய்ய உள்ளனர். அதில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் இடம்பெற உள்ளது. 2 வது குற்றப்பத்திரிக்கையில் மேலும் பல தொழிலதிபர்கள், பிரமுகர்கள், பெண்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களில் ஒன்றான யுனிடெக் நிறுவனம் பல்வேறு முறைகேடுகள் செய்ததை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. இதன் மேலாண்மை இயக்குனர் சஞ்சய் சந்திராவிடம் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அவர் மீது மோசடி, முறைகேடு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. சஞ்சய் சந்திராவின் சகோதரர் அஜய் சந்திரா பல மோசடிகளை ஒத்துக்கொண்டுள்ளார் மேலும் பல்வேறு தகவல்களை அவர் சி.பி.ஐ. க்கு தெரிவித்துள்ளார். அதனடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்