முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ் கிடைக்காதது பெரிய ஏமாற்றம்: கேப்டன் தோனி

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன. 1 - சென்னை போட்டியில் டாஸ் கிடைக் காதது தோல்விக்கு காரணமாக இருக் கலாம், வீரர்களை குறை சொல்ல முடி யாது என்று இந்திய கிரிக்கெட் அணியி ன் கேப்டன் தோனி கருத்து தெரிவித்து இருக்கிறார். 

சென்னை போட்டியில் தோல்விக்கு முதல் வரிசை பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணம் என்ற கருத்து நிலவுகிறது. 

இது பற்றி கேப்டன் தோனியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது - டாஸ் நமக்கு சாதகமாக அமையாதது தோல் விக்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

ஆட்டத்தின் துவக்கத்தில் பந்து வீச்சா ளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக அமைந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களு ம் நன்றாக பந்து வீசினார்கள். 

அவர்களது பந்து வீச்சின் லென்த் சரி யாக இருந்தது. காலை நேரத்தில் வா னிலை அதிக ஈரப்பதமாக இருந்தது. அதனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்வதில் சிரமம் இருந் தது. 

ஆனால் நேரம் செல்லச் செல்ல பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது. நான் அடித்த சதத்தை சிறப் பாக சொல்கிறார்கள். 

இது போல பல சதங்களை நான் அடித் துள்ளேன். இன்னும் சிலர் எனது இந்த ஆட்டத்தைப் பார்த்து விட்டு நான் பழைய பார்முக்கு திரும்பி விட்டதாக சொல்கிறார்கள். 

அவ்வாறு நான் பழைய பார்முக்கு திரு ம்பி இருந்தால் அது நல்ல விஷயம் தா னே. அணி வீரர்களுக்கு ஏற்பட்ட நெரு க்கடியை சமாளிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் நான் மகிழ்ச்சி அடைகி றேன். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த முதல் ஒரு நாள் போட்டிக்கு சே வாக் தேர்வு செய்யப்பட்டது குறித்து அவரிடம் கேட்ட போது, இந்தப் போ   ட்டிக்கு சேவாக்கா, ரகானேவா என்ற நிலை எழுந்த போது,சேவாக் தான் ஒரு நாள் போட்டிக்கு தகுதியானவர் என்று தேர்வு செய்தோம் என்றார் அவர். 

கெளதம் காம்பீரின் வித்தியாசமான பார்ம் குறித்து தோனி பதில் எதுவும் கூறாமல் மழுப்பி விட்டார் . விராட் கோக்லி பீல்டிங்கின் போது, காயம் அடைந்தது குறித்தும் தனக்கு தெரியாது என்றார் அவர். 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மை தானத்தில் நடந்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தி ய அணி 227 ரன் எடுத்தது. பின்பு ஆடிய பாக். அணி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago