முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவையாறு சத்குரு தியாகராஜரின் 166வது ஆராதனை விழா-பந்தல் கால்நடும் நிகழ்ச்சி

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

தஞ்சை. டிச.- 3 - தஞ்சை மாவட்டம் திருவையாறு சத்குரு தியாகராஜரின் 166வது ஆராதனை விழா வருகிற ஜன.27ந்தேதி தொடங்குகிறது. அதனையொட்டி தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு nullஜைகள், நடந்தது. பின்னர் விழா பந்தல் காலை தியாக பிர்ம சபையின் தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் நட்டார். அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சத்குரு தியாகராஜரின் 166வது ஆராதனை விழா வருகிற ஜன.27ந்தேதி தொடங்கி 31ந்தேதி நிறைவடைகிறது. தமிழக கவர்னர் டாக்டர் ரோசய்யா விழாவை துவக்கி வைக்கிறார். நிறைவு நாளன்று திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜரின் இல்லத்தில் இருந்து அவருடைய திருவுருவ சிலை உஞ்சவிருத்தி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேககங்கள் நடத்தப்படுகிறது. அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நூற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் என்று கூறினார். பேட்டியின்போது தொழில் அதிபர் அந்தோணிசாமி, சுரேஷ்குமார் மூப்பனார், சபா துணைச்செயலாளர்கள் ராம்குமார், கோவிந்தராஜன், பொருள“ளர் கணேஷ், அறங்காவலர்கள் கணேசன், பஞ்சநதம், டெக்கான் மூர்த்தி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். துவக்க விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தஞ்சை கலெக்டர் கா.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை சபா தலைவர், செயலாளர்கள் அரிதுவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ராஜாராவ் உள்பட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago