முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச கண்பரிசோதனை முகாம்

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம்,ஜன.- 3 - ராமநாதபுரத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி பொதுமக்களுக்கான இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஜனவரி 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 24-வது சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாசன் கண்மருத்துவமனை சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்தலிங்கன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைபோலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இயக்கூர்தி ஆய்வாளர்கள் இளங்கோ, குலோத்துங்கன், போக்குவரத்து ஆய்வாளர் இருளாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்பரிசோதனை செய்து பயனடைந்தனர். இதேபோல், ராமேசுவரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியை ராமேசுவரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ராமேசுவரம் பகுதி முழுவதும் சைக்கிளில் சென்று சாலைபாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், போக்குவரத்து விதிகள் குறித்து துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். நிகழச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட இயக்குனர் ஜெயகாந்தன், பால்டுவின், ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்