முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம்மெட்டு ரோட்டில் தற்காலிக போக்குவரத்து சோதனைச்சாவடி

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

கம்பம் ஜன 2 கம்பம்மெட்டு ரோட்டில் தற்காலிகமாக சோதனை சாவடி துவங்கியுள்ளது சபரி மலை செல்லும் வாகனங்களுக்கு பெர்மிட் தருவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக பெர்மிட் வட்டார போக்குவரத்து துறை வழங்கும்

சொந்த வாகனங்களுக்கு தேவையில்லை டூரிஸ்ட் வாகனங்களுக்கு தற்காலிக பெர்மிட் வாங்க வேண்டும் சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு லோயர்கேம்பில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் தற்காலிமாக பெர்மிட் வழங்கி வருகின்றனர் சபரிமலை செல்லும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் வருவதால் பல மணி நேரம் பெர்மிட் வாங்க காத்திருக்க வேண்டியுள்ளது மேலும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சபரிமலை செல்லும் வாகனங்கள் ஓரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது கம்பம்மெட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக பெர்மிட் வழங்க கம்பம்மெட்டு ரோட்டில் போக்குவரத்துறை சார்பில் தற்காலிக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது இங்கு சபரிமலை செல்லும் வாகனங்கள் தற்காலிமாக பெர்மிட் வாங்கிக் கொள்ளலாம்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்