முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா தளங்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 3 - தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா தளங்களுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.10 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்துதரவும், சுற்றுலா தளங்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்தம் ரூ.10 கோடியும் ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாழ்வில் சுவையும், சுறுசுறுப்பும் நல்குவதில் சுற்றுலா முதன்மையிடம் வகிக்கிறது. சுற்றுலாவின் மூலம், இயற்கை அழகு மிளிரும் இடங்களையும், வரலாற்று புகழ்மிக்க இடங்களையும், பாரம்பரியமிக்க திருத்தலங்களையும் பொதுமக்கள் கண்டுகளிக்கின்றனர். அறிவுப் புரட்சிக்கும், சிந்தனைக் கிளர்ச்சிக்கும் சுற்றுலா வழி வகுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சுற்றுலாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரியமிக்க திருத்தலங்களுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் 30 லட்சம் ரூபாய் செலவிலும், கோயம்புத்தூர் மாவட்டம் கல்லாற்றில் 25 லட்சம் ரூபாய் செலவிலும், திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டி​செங்குறிச்சியில் 45 லட்சம் ரூபாய் செலவிலும், சேலம் மாவட்டம் வடசென்னிமலை கோவிலில் 25 லட்சம் ரூபாய் செலவிலும், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூர் தேவாலயம், பிரான்மலை, நாட்டரசன் கோட்டை, ஏரியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருப்பத்தூர் பரியா மருந்தீஸ்வரர் கோவில், ஆகிய இடங்களில் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் தவளகீரீஸ்வரர் ஆலயத்தில் 25 லட்சம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டத்தில் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர ஆலயம், ஆவூர் பசுபதீஸ்வரர், பஞ்சபைரவர் கோவில் ஆகிய இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில், பொட்டல்புதூர், மொகைதீன் தர்காவில் 96 லட்சம் ரூபாய் செலவிலும், விழுப்புரம் மாவட்டம், கல்வராயன்மலை, கோமுகி அணை கூத்தாண்டவர் கோவில், ஆகிய இடங்களில் 69.16 லட்சம் ரூபாய் செலவிலும், ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில், உத்தரகோசமங்கை, ஓரியூர் ஆகிய இடங்களில் 91.50 லட்சம் ரூபாய் செலவிலும், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில் ஆகிய இடங்களில் 1 கோடியே 56 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவிலும், தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் 44 லட்சம் ரூபாய் செலவிலும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளத்தியில் 30 லட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் 50 லட்சம் ரூபாய் செலவிலும், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் சிவன் கோவிலில் 35 லட்சம் ரூபாய் செலவிலும், திருப்nullர் மாவட்டம், தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் 31.20 லட்சம் ரூபாய் செலவிலும், திருச்சி புளியஞ்சோலையில் 50 லட்சம் ரூபாய் செலவிலும், ஆக மொத்தம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அங்கு வரும் யாத்திரிகர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பயணிகள் தங்குமிடம், குடிநீnullர் வசதி, உணவுக் கூடம், பொருள் வைப்பறை, கழிவறை வசதிகள், அணுகு சாலைகள் போன்ற பல்வேறு பணிகளை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடார் பாளையத்தில் உள்ள அண்ணா nullங்காவில் படகு குழாம் அமைத்தல், இரயில் nullங்கா அமைத்தல், கம்பிவேலி அமைத்தல், குளியல் அறைகள் கட்டுதல், விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல், சுற்றுப்பாதை அமைத்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக 4 கோடியே 56 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் முதல் தவணையாக 3 கோடியே 64 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயினை விடுவித்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள முக்கொம்பு என்ற இடம், தமிழகத்தில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காக இங்குள்ள nullங்காக்களை அழகுபடுத்துதல், விளக்கு வசதிகள், தங்கும் விடுதி, கழிப்பிட வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், nullநீர் விளையாட்டுக்கள் ஆகிய கட்டமைப்புகளை 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா தலங்களுக்கு மக்கள் வருகை அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக விளங்குவது, நல்ல சாலைக் கட்டமைப்பு வசதிகளாகும். இதனைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேம்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிவகங்கை மாவட்டம் மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் சாலை, 62.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரான்மலை தேரோடும் வீதியில் சிமெண்ட் கான்கிரிட் சாலை அமைத்திடவும், ஏரியூர் மலை மருந்தீஸ்வரர் கோயில் கிரிவலப்பாதையில் சுற்றுச் சுவர் மற்றும் சிமெண்ட் சாலை 16.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திடவும், கள்ளிப்பட்டு பஞ்சாயத்து பெரிச்சி கோவில் தேவாலயம் சாலையை 39.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திடவும், விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை செங்கமேடு சாலையை அகலப்படுத்தி சுற்றுச்சுவர் கட்ட 45.00 லட்சம் ரூபாய், நாகப்பட்டினம் மாவட்டம், தில்லையாடி இரயில்வே சாலையை மேம்படுத்திட 22.50 லட்சம் ரூபாய், விருதுநகர் மாவட்டம், மகராஜபுரம் அழகாபுரி சாலையிலிருந்து தாணிப்பாறை சாலை வரை அகலப்படுத்த 80 லட்சம் ரூபாய், திருவாரூர் மாவட்டம் செங்காந்தி சேத்தியா குறிச்சி சாலையை மேம்படுத்திட 62 லட்சம் ரூபாய், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மேலவயலூர் சாலையை (முருகன் கோயில் சாலை) மேம்படுத்திட 52 லட்சம் ரூபாய், பெட்டவாய்தலை அருள்மிகு மத்யானீஸ்வரர் கோவில் கான்கீரிட் சாலையை மேம்படுத்திட 25 லட்சம் ரூபாய், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வடக்கு ரத வீதி மேம்பாடு மற்றும் காலகம்​ஆவுடையார் கோவில் பீடர் சாலை மேம்படுத்திட 55 லட்சம் ரூபாய், விராலிமலை இலுப்nullர் ஆலங்குளம் சாலை மேம்படுத்திட 1 கோடி ரூபாய், ராமநாதபுரம், ராமேஸ்வரம் நம்புநாயகி கோயில் சாலையை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய், நம்புநாயகி கோயில் கிழக்கு​மேற்கு சாலையை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் முதல் டால்பின் நோஸ் வரை சாலை மேம்படுத்திட 92.95 லட்சம் ரூபாய், ஈரோடு மாவட்டம் சென்னிமலை பெருந்துறை காங்கேயம் சாலையை மேம்படுத்திட 1 கோடியே 20 லட்சம் ரூபாய், nullநீலகிரி மாவட்டம் ஊட்டி கைகட்டி முதல் மேலூர் ஓசையட்டி சாலையை மேம்படுத்திட 91.95 லட்சம் ரூபாய், என மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் மேம்படுத்தப்படும்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் இந்த இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகள் மேம்படும்.
இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்