முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 61 பேர்பலி

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

அபித்ஜான், ஜன. - 3 - மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் உள்ள அபித்ஜான் நகரில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 61 பேர் பலியாகியுள்ளனர்.  மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் உள்ளது அபித்ஜான். அந்த நகரில் உள்ள பெலிக்ஸ் ஹவ்பெளட் பாய்க்னி ஸ்டேடியத்தில் புத்தாண்டை வரவேற்க இரவு நேரத்தில் ஏராளமானோர் கூடி இருந்தனர். நள்ளிரவில் புத்தாண்டு பிறந்த போது வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அப்போது வானவேடிக்கையைப் பார்க்க மக்கள் முண்டியடித்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 61 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  இறந்தவர்களில் பெரும்பாலானோர் 8 முதல் 15 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டை வரவேற்க வந்த இடத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்