முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அப்பீல் மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      ஊழல்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊர் காட்பாடி. இவரது வீடு, அலுவலகத்தில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த மார்ச் மாதம் 11-​ந் தேதி துரைமுருகனுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. நோட்டீசு அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி துரைமுருகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கோ. சந்துரு மனுவை கடந்த அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்தார்.

இதனை எதிர்த்து துரைமுருகன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த அப்பீல் மனுவில் தனது மனைவி சாந்தகுமாரிக்கு வருமானம் உள்ளது. அவர் தனியாக வருமான வரி செலுத்துகிறார். ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது மனைவி குறித்த சொத்து கணக்கையும் ஒன்றாக கருதி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளனர். இது தவறு. இதனை கவனிக்க தனி நீதிபதி தவறி விட்டார்.

எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் பெஞ்ச் விசாரித்து தனி நீதிபதி உத்தரவு சரியானது. அதில் தலையிட விரும்பவில்லை என்று கூறி துரைமுருகனின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்