முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரத்தின் மீது தேர்தல் வழக்கு: ராஜகண்ணப்பன் சாட்சியம்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - கடந்த 2009 ஆம் ஆண்டு சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்று செல்லாது என அறிவிக்க கோரி ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நேற்று ராஜகண்ணப்பன் சாட்சியம் வழங்க நீதிபதி கே.வெங்கடராமன் முன்பு ஆஜரானார். 

ஆஜராகி வாக்கு மூலத்தில் அவர் தெரிவித்தாவது:-

கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்திருந்தது. அப்போது தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணப்பட்டு, மதியம் 12.00 மணியளவில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பிறகு 1.30 மணியளவில் 3,354 வாக்கு வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவித்தனர். இதுகுறித்து அப்போது தேர்தல் அதிகாரியாக இருந்த  மாவட்ட ஆட்சியர் பங்கஜ்குமார் அறிவித்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டபோது 6 சட்டப்பேரவை தொகுதிகள் முறைப்படுத்தி, வாக்கு எண்ணிக்கையின் போது ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக விளக்கம் அளித்தார். அதை நான் மறுத்து, மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவர் மறு எண்ணிக்கை குறித்து, எந்த உத்தரவு பிறப்பிக்க வில்லை என்றார். 

மேலும், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஆளும் கட்சியாக இருந்த தி.முக. இணைந்து தமிழகத்தில் ராஜகப்பீரம் என்ற இடத்தில் பணம் பட்டுவாடா நடைபெற்றது என்று புகார் அளித்தும், உள்துறை அமைச்சரின் மகன் என்பதால் கார்த்தி சிதம்பரம் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. புகார் கொடுத்த எங்கள் மீது, வழக்கு தொடுத்தனர். அந்த தேர்தலில் தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம் நடந்தது. கட்சிக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ளது என்று ராஜகண்ணப்பன் சாட்சியம் அளித்தார். நேற்று ஒரு பகுதி சாட்சியும் மட்டுமே முடிந்தது. வரும் திங்கள் அன்று மீண்டும் ராஜகண்ணப்பனிடம் சாட்சி விசாரணை தொடரும், ப.சிதம்பரம் தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்