முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அய்யாறு வாண்டையார் மனைவி மரணம்: முதல்வர் இரங்கல்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - தஞ்சை கே.அய்யாறு வாண்டையார் மனைவி ஆனந்தவள்ளியம்மாள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.அய்யாறு வாண்டையார் மனைவி ஆனந்த வள்ளியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மரணடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். 

மனைவியை இழந்து வாடும் அன்புச் சகோதரர் அய்யாறு வாண்டையாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்