முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 294 ரன்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. 4 -  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி யில் நடைபெற்று வரும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங் கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன் னில் ஆட்டம் இழந்தது. 

இலங்கை அணி தரப்பில், கேப்டன் ஜெயவர்த்தனே மற்றும் திரிமன்னே இரு வரும் அரை சதம் அடித்து அணியின் மானத்தை காப்பாற்றினர். திரிமன்னே சத வாய்ப்பை நழுவ விட்டார். 

ஆஸ்திரேலிய அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான பேர்டு  மற்றும் ஸ்டார்க் இருவரும் இணைந்து 7 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினர். அவர்களுக்கு ஆதரவாக சிட்லே, ஜான்சன் மற்றும் லியான் ஆகியோர் பந்து வீசினர். 

வார்னே மற்றும் முரளீதரன் கோப்பை க்கான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலி யாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ் திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்று வருகின்றன. 

இந்தத் தொடரின் 3-வது மற்றும் கடை சி போட்டி சிட்னியில் உள்ள கிரிக்கெ ட் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் டாசில் வெற்றி பெற்ற ஆஸி. அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இலங்கை அணி தரப்பில், கருணாரத் னே மற்றும் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். ஆனால் இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. 

இலங்கை அணி இறுதியில் முதல் நாள ன்று முதல் இன்னிங்சில் 87.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 294 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர். 

திரிமன்னே 9 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவவிட்டார். அவர் 151 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 13 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியி ல் அவர் லியான் வீசிய சுழற் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 

கேப்டன் ஜெயவர்த்தனே 110 பந்தில் 72 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ஸ்டார்க் வீசிய பந்தில் கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

முன்னதாக துவக்க வீரர் தில்ஷான் 61 பந்தில் 34 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, கீப்பர் சண்டிமால் 44 பந்தில் 24 ரன்னையும், மேத்யூஸ் 15 ரன்னையும், சமரவீரா 12 ரன்னையும், பிரதீப் 17 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பேர்டு 41 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத் தார். ஸ்டார்க் 71 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, சிட்லே 2 விக்கெட்டும், லியான் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

இலங்கை அணியின் கேப்டனான ஜெ யவர்த்தனே 3 வருட காலத்திற்குப் பிற கு வெளிநாட்டு மண்ணில் அரை சதம் அடித்து இருக்கிறார். அவர் சமீப கால த்தில் உள்நாட்டுப் போட்டிகளில் சிற ப்பாக ஆடி ரன்னைக் குவித்தார். 

திரிமன்னே இதில் சதம் அடித்து இருந் தால் இது அவருக்கு முதலாவது டெ ஸ்ட் சதமாக இருந்திருக்கும். டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்