முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜன.4 - புதுச்சேரியில் புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு சென்ற பிளஸ்-2 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய தனியார் பஸ் கண்டக்டர் முத்து மற்றும் அவரது நண்பரான காந்தி குப்பத்தை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் வெங்கடாஜலபதி ஆகியோரை திருவெண்ணை நல்லூர் போலீசார் உதவியுடன் புதுச்சேரி திருபுவனை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இது குறித்து போலீஸ் டிஜஜி சுக்லா நேரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளார். 

புதுச்சேரி திருபுவனையை அடுத்த கொத்தபுரிநத்தத்தில் வசிப்பவர் நாகராஜ். செக்யூரிட்டியாக உள்ளார். இவரது மகள் பச்சையம்மாள்(17). பிளஸ்-2 மாணவியான இவர் புத்தாண்டு அன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து வில்லியனூர் மாதா கோவிலுக்கு சென்றார். மாலை டியூசனுக்கு செல்ல வேண்டும் மதியம் வந்து விடுவேன் என்று வீட்டில் கூறி சென்றவர் இரவு 8 மணிவரை வீடு திரும்பவில்லை. 

அவரது பெற்றோர் கோவிலில் இருந்து நேரிடியாக டியூசன் சென்று இருக்கலாம் என்று கருதி டியூசன் சென்டருக்கு போன் செய்தனர். அங்கு வரவில்லை என்று கூறியதால் பதட்டம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து இரவு சுமார் 10 மணியளவில் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் வில்லியனூர் போலீசார் நீங்கள் முறைப்படி திருபுவனை போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். 

இதையடுத்து திருபுவனை போலீசில் புகார் செய்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் படிப்பு விஷயமாக சென்று இருக்கலாம் என்று கூறி வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியமாக கூறி அனுப்பி விட்டனர். 

இந்த நிலையில் பெற்றோர் தங்களது மகளை விடிய விடிய தேடினர். திரும்பவும் போலீஸ் நிலையம் சென்று தங்களது மகள் கிடைக்க வில்லை என்று கூறியும் போலீசார் அலட்சியமாகவே நடந்து கொண்டனர். 

இந்த நிலையில் பச்சையம்மாள் தனது தாயாருக்கு போன் செய்து தான் விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருப்பதாக கூறி போனை வைத்து விட்டார். 

இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு விழுப்புரம் விரைந்தனர். 

விழுப்புரத்தில் மயக்க நிலையில் இருந்த தங்களது மகளை புதுச்சேரி அழைத்து வந்து அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதை அறிந்த போலீஸ் டிஜஜி சுக்லா மாணவி பச்சையம்மாளை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். 

இதற்கிடையே போலீசாரின் அலட்சியப்போக்கை கண்டித்து மாணவவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் இந்த போராட்டம் நடந்தது. மாணவியின் சொந்த ஊரான கொத்தபுரிநத்தம், திருபுவனை, திருவாண்டார் கோவில் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். 

மேலும் மாணவி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அருகிலும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள் என்று பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

இதனால் புதுச்சேரியில் பெரும் பதட்டமும், பரபரபான சூழ்நிலை நிலவி வருகிறது. மாணவியின் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் போலீஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

பிளஸ்-2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகளும் நீதி கிடைக்க வேண்டி போராட்டத்தில் குதித்ததால் புதுவை முழுவதும் நேற்று போர்க்கோலம் பூண்டு காணப்பட்டது. 

 

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தீ குளிக்க முயற்சி

 

புதுவையில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தை நாகராஜ் நேற்று திடீரென்று மருத்துவமனை வாயிலை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து மருத்துவமனை அருகில் தனது உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். 

உடனே அருகில் இருந்த பொதுமக்களும், மாணவர்களும் ஓடிச் சென்று அவரை பிடித்து தீ குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ஏற்கனவே கடும் டென்ஷனில் இருந்த போராட்டக்காரர்களை மேலும் உசுப்பேற்றுவதாக அமைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்