ஒரிசாவில் விஷம் குடித்து 7 பேர் தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      இந்தியா
orissa-map

புவனேஸ்வர்,ஏப்.18 - ஒரிசாவில் வறுமை காரணமாக விஷம் குடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஒரிசா மாநிலம் கடோகான் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்தர்மெகார். இவர் தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்தார். வறுமை வாட்டியதாலும், கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உத்தர் முடிவு செய்தார். அதன்படி 8 பேரும் விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் உத்தரின் மனைவி மற்றும் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். மயக்க நிலையில் இருந்த உத்தர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: