முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தல்: ஒபாமா வெற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சனிக்கிழமை, 5 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜன.6  - அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றிபெற்றார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் வழங்கப்பட்டது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போது அதிபராக இருக்கும் பாரக் ஒபாமாவும் துணை அதிபர் பதவிக்கு ஜோய் பிதெனும் குடியரசு கட்சி சார்பாக மித் ரோம்னியும் துணை அதிபர் பதவிக்கு பால் ராயனும் போட்டியிட்டனர். இதில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட பாரக் ஒபாமா கடந்த முறையைவிட அதிகமாக ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார். அவர் வெற்றிபெற்றாலும் மாகாண அளவில் பிரதிநிதிகள் ஓட்டுப்போட வேண்டும். இந்த ஓட்டப்பதிவு கடந்த டிசம்பர் மாதம் நடந்தது.  இதில் அதிபர் ஒபாமாவுக்கு 332 ஓட்டுக்களும் ரோம்னிக்கு 206 ஓட்டுக்களும் கிடைத்தன. இதை அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டும் கூடி முறைப்படி அறிவிக்க வேண்டும். இதுதான் தேர்தல் முடிவின் இறுதி நடைமுறையாகும். அதன்படி நேற்று பாராளுமன்றத்தின் இருசபைகளின் கூட்டத்தில் இந்த ஓட்டுக்கள் விபரம் அறிவிக்கப்பட்டதோடு அதிபர் ஒபாமா வெற்றிபெற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இது ஒபாமா வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்