முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானியின் சாதுர்யத்தால் விமானம் பத்திரமாக தரையிறக்கம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 9 - கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் சென்ற விமானத்தின் டயர் நடுவானில் கழன்று விழுந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 

மங்களூர் விமான நிலையத்தில் இருந்து சிறிய விமானம் ஒன்று மெல்போர்ன் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தை சீனாவைச் சேர்ந்த 21 வயதான பயிற்சி விமானி ஒருவர் ஓட்டிச் சென்றார். மெல்போன் அருகே விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் விமானத்தின் சக்கரம் கழன்று விட்டது. இதனையடுத்து விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. 

எரிபொருள் தீரும் வரை கிட்டத்தட்ட 2 மணி நேரம் வட்டமடித்த அந்த விமானம் ஓடுதளத்தில் மோதி வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆனாலும் மிகவும் சாதுர்யமாக செயல்பட்ட விமானி, மெல்போர்ன் ஓடுதளத்தில் உராய்ந்தபடி புல்வெளியில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விமானத்திற்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தை ஓட்டிய அந்த பயிற்சி விமானி, ஏற்கனவே சீனாவில் 120 மணி நேரம் விமானத்தை தனியாக ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago