முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் பலாத்கார சட்டத்தை திருத்த ஹமீது வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.9 - பாலியல் பலாத்கார சட்டத்தில் உடனடியாக திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாம் 2013 நிகழ்ச்சியில் அன்சாரி பங்கேற்றுப் பேசியதாவது: 

சமீபத்தில் டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் நம் அனைவருக்கும் தலைக்குனிவை எற்படுத்தி விட்டது.  இதுதொடர்பான பொதுமக்களின் கோபமும், மனவேதனையும் நியாயமானது. மக்களின் இந்த உணர்ச்சியை சட்டத் திருத்தமாக மாற்ற வேண்டும். அத்துடன் இதுதொடர்பான மக்களின் எண்ணங்கள் சமூக விதிமுறைகளாகவும், சமூக பழக்கவழக்கமாகவும் மாறவேண்டும்.   பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் எல்லா நிகழ்வுகளிலும் மனித உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேன்டும்.

மனித உரிமையை நிலைநாட்டுவதில் இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் அடங்கிய என்.சி.சி.படையினர் முத்கிய பங்கு வகிக்க வேண்டும். ஒழுக்கமான இந்தியாவை உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். சமுதாயத்தில் இளைஞர்களிடையே மாற்றம்  ஏற்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்கு உள்ளது என்றார்.

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்