முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன.10-ல் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.9  - சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும், மத்திய நீர்வளத் துறை செயலாளருமான துருவ் விஜய்சிங் தலைமையில் இம்மாதம் 10-ம்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு ஜனவரி மாதம் வரை தேவையான  நீரின் அளவை கண்காணிப்புக்குழு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக டிசம்பர் மாதம் 7-ம்தேதி கூடிய காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு 12 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அந்த கூட்டத்தின் முடிவில்

2007-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்காணிப்புக் குழுவின் தலைவர் துருவ் விஜய்சிங் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு வெளியாகும் என்பதால் 15 நாட்தளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கண்காணிப்புக்குழு கூட்டம் டிசம்பர் மாதம் 7-ம்தேதிக்குப் பிறகு நடைபெறவில்லை. இந்த நிலையில் அரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பை வெளியிட கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்தது. இசையடுத்து அந்த நடவடிக்கையைச் செயல்படுத்தாமல் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. 

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு முறையிட்டது.இதையடுத்து நீதிபதிகள் டி.கே.ஜெயின்  மதன் பி.லோகுர் ஆகியோர் அடங்கிய

அமர்வு ஜனவரி 11-ம் தேதிக்குள் காவிரி கண்காணிப்புக் குழு கூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago