முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ஈவ்டீசிங்: 4 வெளிநாட்டவர் கைது

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 9 - டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் மேலாளரை ்ஈவ் டீசிங் செய்த நான்கு வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். கன்னாட் பிளேஸ் அருகே என்.டி.எம்.சி பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் உதவி மேலாளராக பணியாற்றும் பெண் நேற்று முன்தினம் மாலை ஜன்பத் மார்க்கெட் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது டெல்லியில் உள்ள வெளி நாட்டு தூதரகத்துக்கு சொந்தமான காரில் வந்த நான்கு வெளிநாட்டினர் ஒட்டல் உதவி மேலாளரை பார்த்து, தகாத முறையில் ஜாடை காட்டியதாக தெரிகிறது. பின்னர் உதவி மேலாளரிடம் அவர்கள் வம்பு செய்தனர். 

இதைக் கண்டித்து, அந்த பெண் அவர்களிடம் வாய்தகராறு செய்து கூச்சல் போட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ்ஈடுபட்டிருந்த போலீசார் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். காரில் இருந்த 4 பேரையும், கன்னட் பிளேஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் மீது குற்றப்பிரிவு சட்டம் 509, 506 மற்றும் 34 ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

இவர்களில் ஒருவர், டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தில் பணியாற்றுபவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான நால்வரில் இருவர் லெபனான் நாட்டை சேர்ந்தவர்கள், ஒருவர் அல்ஜீரியாவையும், மற்றொருவர் ஏமன் நாட்டையும் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது இந்திய நாட்டு ்ஈவ் டீசிங் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago