முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.143 கோடி சொத்து முடக்கம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜன.9  - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் வருமானத்துக்கு அதிகமாக  சொத்து சேர்த்ததாக இவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இவரது தந்தையின் முதல்வர் பதவியை  தவறாகப் பயன்படுத்தி ஜெகன்மோகன் ரெட்டி சொத்துக்களை  குவித்ததாக  கடந்த ஆண்டு மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு கடந்த மே மாதம் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார்.அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெகன்மோகனின் ஜாமீன் மனுவை ஆந்திர மாநில ஐகோர்ட் எற்கெனவே தள்ளுபடி செய்தது. அவரது நீதிமன்றக் காவல் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.143 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது

சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்